', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீ ட்டை அழகுபடுத்துகிறீர்களா?.. இதைப்படிங்க..


    வீ ட்டை அழகுபடுத்துகிறீர்களா?.. இதைப்படிங்க..


    வீ ட்டை அழகுபடுத்துகிறீர்களா?.. இதைப்படிங்க..



    வீட்டை அழகாக வைத்திருக்க அலங்கார பொருட்களை அடுக்கி வைத்து அலங்கரிப்பதற்கு தனிக்கவனம் செலுத்துபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அலங்கார பொருட்கள் வீட்டை அழகாக தோற்ற செய்யும் என்ற எண்ணமே அதற்கு காரணமாக இருக்கும். எத்தகைய அழகியலை வெளிப்படுத்தும் அலங்கார பொருட்களாக இருந்தாலும் அவை இருக்கும் இடத்தை பொறுத்து தான் அதன் அழகு வெளிப்படும். அதற்கு எந்த பொருட்களை எங்கு வைத்தால் அழகுடன் ஆடம்பர தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அழகு பொருட்களாக இருந்தாலும் அதை ஒரே இடத்தில் குவித்து வைத்தால் அதன் தனித்துவ அழகை ரசிக்க முடியாமல் போய்விடும். அந்த அலங்கார பொருட்களை சூழ்ந்து மற்ற பொருட்களை அடுக்கி வைத்தால் அறையே அலங்கோலமாக காட்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பொருட்களை சரியாக ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்து கொண்டு இருக்க கூடாது. அவை எப்போதாவது தான் தேவைப்படும் என்றால் அறைக்குள் சிறிய குடோனை ஏற்படுத்திவிட வேண்டும். அடிக்கடி தேவைப்படாத பொருட்களை குடோனின் மூலைப்பகுதியிலும், மற்ற பொருட்களை அதன் பயன்பாட்டை பொறுத்து முன்வரிசையிலும் அடுக்கி வைக்க வேண்டும்.

    அப்படி ஒழுங்குபடுத்தினால் தேவைப்படும் போது பொருட்களை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். அதேபோல் அறையின் மற்ற பகுதிகளிலும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சில டிப்ஸ்களை பார்ப்போம்.

    * வீட்டின் வரவேற்பறையில் அலமாரி இருந்தால் அதில் அழகு பொருட்களை அடுக்கி வைப்பதற்கு மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. சில பொருட்கள் தனித்து இருந்தால் தான் அதன் அழகியலை ரசிக்க முடியும். ஆகவே வரிசையாக பொருட்களை அடுக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். பொருட்களுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். எங்கிருந்து பார்த்தாலும் ஒழுங்கற்று தெரியாது அழகுடன் பளிச்சிடும் வகையில் அலங்கரித்து வைக்க வேண்டும்.

    * வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை கவரும் பொருட்களை வைப்பதற்கு அலமாரியில் தனி வரிசையை ஒதுக்கி விட வேண்டும். அது குழந்தைகளை குஷிப்படுத்துவதோடு பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் காட்சி தரும். குழந்தைகள் பள்ளிகளில் போட்டியில் வென்று பரிசு பொருட்களை வாங்கி வந்தால் அவைகள் தனியாக தெரியும்படி வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

    * பர்னிச்சர்களையும் அறைக் குள் அடைத்துவிடக்கூடாது. அறைக்குள் விசாலமான இடம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பர்னிச்சர்களை இடம்பெற செய்ய வேண்டும். வரவேற்பறையில் குறைந்த அளவிலான பர்னிச்சர்கள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை எந்த இடத்தில் வைத்தால் அறையுடன் ஒன்றி அழகுற தோன்றும் என்பதை கவனித்து அலங்கரிக்க வேண்டும்.

    * சமையல் அறை அலமாரிகளையும் ஒரே மாதிரியான பொருட்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும். முக்கியமாக மசாலா பொருட்களை ஒரே அளவிலான பாட்டில்களில் நிரப்பி அடுக்கி வைக்க வேண்டும். அப்போது தான் ஒழுங்குடன் தெரியும். பொருட்களை எடுத்து பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும்.

    * அறையில் மேஜை இருந்தால் அவற்றில் இடம் இருக்கும் அளவிற்கு டிராயர்களை அமைத்து விட வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை அதில் அடுக்கி வைத்து பயன்படுத்தலாம். இதனால் பொருட்கள் தேவையில்லாமல் அறைக்குள் ஒழுங்கற்று கிடப்பது தவிர்க்கப்படும். அறையும் அழகுடன் காட்சி அளிக்கும்.

    * கட்டிலுடன் இணைந்த டிராயர்களை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலுக்கு அடியில் சிறிய டிராயரை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் தலையணை, போர்வைகளை மடித்து வைத்துக்கொள்ளலாம். இதனால் கட்டிலில் பொருட்கள் குவிந்து கிடக்காது. படுக்கை அறையும் அழகுடன் மிளிரும்.

    * அறைக் குள் அதிக அளவில் பொருட்கள் இல்லாமல் இருந்தாலே போதும். அறையின் அழகை பற்றி கவலைப்பட தேவையில்லை. பொருட்களை மீண்டும் எடுத்த இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்தாலே அழகுடன் மிளிரும்


    தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.