', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டுமனைக்கு பட்டா இல்லாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள்


    வீட்டுமனைக்கு பட்டா இல்லாவிட்டால் ஏற்படும் பிரச்சினை



    சென்னை புறநகர் பகுதிகளில் பெருகிவரும் குடியிருப்புகளால் அந்த பகுதி இடங்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் சாலை கட்டமைப்புகளும், குடியிருப்புகளும் பெருகி வரும் பகுதியில் இருக்கும் காலி மனைகளின் விலை நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருக்கிறது. உடனடியாக வீடு கட்டியோ அல்லது வீடு வாங்கியோ குடியேற இயலாத நிலையில் இருப்பவர்கள் வீட்டுமனைகளை வாங்குவதற்கே ஆர்வம் காட்டுகிறார்கள்.

    வீட்டுமனை தேர்வு

    முதலில் வீட்டுமனை வாங்கி விட்டால் பின்னாளில் பணத்தை சேமித்து வீடு கட்டிவிடலாம் என்ற மனநிலையில் பலர் இருக்கிறார்கள். சிலர் முதலீடு நோக்கத்தில் மனை வாங்குவதற்கும் முனைப்பு காட்டுகிறார்கள். பிற்காலத்தில் அந்த பகுதிகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கணக்கிட்டு அவர்களின் வீட்டுமனை தேர்வு அமைகிறது. நன்கு வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக இருப்பின் நிச்சயம் சில ஆண்டுகளில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மனைகளை வாங்குகிறார்கள்.

    வீட்டுமனைகள் வாங்கும்போது அந்த பகுதியின் வளர்ச்சி நிலவரங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளக்கூடாது. வாங்கும் வீட்டுமனை தொடர்பான விவரங்களை தீவிரமாக விசாரிக்க வேண்டும். அந்த மனைக்கு அரசு அங்கீகாரம் இருக்கிறதா? என்பதை உறுதி படுத்த வேண்டும். அந்த இடம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.), நகர ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி) ஆகியவற்றில் எந்த வகையை சார்ந்தது என்பதை தெளிவு படுத்த வேண்டும். பஞ்சாயத்து பகுதியில் அமைந்திருக்கும் இடமா? என்பதையும் தீவிர விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    அவசரம் கூடாது

    மொத்தத்தில் அந்த மனைக்கான அங்கீகாரம் இவற்றில் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவை வாங்கினால் தான் பிற்காலத்தில் பிரச்சினை எழாது. சிலர் வீட்டு மனையின் ஒரு பிரிவை வாங்கி இருப்பார்கள். அது யாராவது ஒருவரிடம் இருந்து பெற்ற மனையாக இருக்கும். ஆனால் அதற்கான பட்டாவை வாங்கி இருக்க மாட்டார்கள்.

    அப்படி பட்டா வாங்காமல் இருப்பதும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். சிலர் இடத்துக்கு அப்ரூவல் இருக்கிறது. பட்டா கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும் என்று சொல்லி விற்க முன்வருவார்கள். அப்படிப்பட்ட மனைகளை வாங்குவதற்கு அவசரம் காட்டக்கூடாது. ஏனெனில் வாங்கிய மனைக்கு உங்கள் பெயரில் கிரயப்பத்திரம் இருந்தாலும் பட்டா இருந்தால் மட்டுமே இடத்துக்கு முழுமையாக உரிமை கொண்டாட முடியும்.

    அங்கீகாரம் பற்றி பரிசீலனை

    வாங்கிய மனையானது குடியிருப்பு பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட இடமாக இருந்தால் பிரச்சினை இல்லை. சில இடங்கள் புறம்போக்கு நிலங்களாக கூட இருக்கலாம். அதை ஆக்கிரமித்து ஒட்டுமொத்த அங்கீகாரத்தை சுட்டிக்காட்டி மனையை விற்பனை செய்து இருக்கலாம். அத்தகைய இடங்களுக்கு பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். முறையான அங்கீகாரம் பெற்ற இடங்களுக்கு தான் பட்டா கிடைக்கும்.

    முதலில் வீட்டுமனை வாங்கும்போதே விற்பவர் பெயரில் தான் பட்டா இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சிலர் பட்டா இல்லாமல் மனை வாங்கி, அதை குறைந்த விலைக்கும் விற்க முற்படுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் மனை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். அவர் விற்பனை செய்யும் இடம் அங்கீ கரிக்கப்பட்ட மனை தானா என்பதை ஆவணங்களின் உதவியோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    பட்டா இல்லாவிட்டால் பிரச்சினை

    சில சமயங்களில் வாங்கும் மனைக்கு பட்டா இல்லாவிட்டால் அந்த இடத்தை விற்பனை செய்ய முடியாத நிலையை சந்திக்க நேரிடும். குறிப்பாக அந்த மனை ‘சீலிங்’ பிரச்சினையில் சிக்கி இருக்கலாம். அதாவது அந்த மனைப்பகுதி இடங்களை அரசு கையகப்படுத்தி இருக்கும். அதனால் அந்த இடம் அரசுக்கு சொந்தமாகி விடும்.

    அப்படி இருக்கையில் அந்த மனையை பிறரிடம் இருந்து வாங்கி இருந்தாலும் சொந்தம் கொண்டாட முடியாது. விற்பனை செய்யவும் முடியாது. அரசு நிலமாகி விட்டதால் அதற்கு பட்டாவும் பெற முடியாது. அந்த மனைகள் தான் ‘சீலிங்’ எனப்படும். ஆகவே வாங்கும் மனையானது சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி.யால் அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருக்க வேண்டும். அத்தகைய மனைகளுக்கு தான் பட்டா கிடைக்கும் என்பதால் மனை வாங்கும் விஷயத்தில் அது அங்கீகாரம் பெற்றது தானா? என்பதை இறுதி செய்ய வேண்டும்.

    சரிபார்க்க வேண்டும்

    சிலர் மனையின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பார்கள். அதற்கு முறையான பட்டா வைத்து இருப்பார்கள். மனையை விற்ற பகுதியை தவிர மீதி பகுதி தனக்கு சொந்தமானது என்பதை பட்டா மூலம் மீண்டும் உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக விற்கப்பட்ட ஒரு பகுதி மனையை வாங்கியவர் உடனே பட்டா பெற்று இருந்தால் அந்த பகுதி இடத்துக்கு தான் பட்டா வாங்கி இருக்கிறாரா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

    ஏனென்றால் விற்காத இடத்துக்கும் சேர்த்து பொய்யான தகவல் மூலம் பட்டா வாங்கி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி வாங்குவது செல்லாது என்றாலும் போராடி தான் மீண்டும் இடத்தை திரும்ப பெறும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே பட்டா விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். அது வீட்டுமனையாக இருந்தாலும், வேறு சொத்தாக இருந்தாலும் பட்டாவை உடனே வாங்கி விட வேண்டும்.

    உறுதி செய்வது நல்லது

    அந்த பட்டா உங்கள் பெயரில் தான் இருக்கிறதா? என்பதை அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும். போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பட்டாவை பெயர் மாற்றம் செய்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் பட்டா வாங்கியதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணிவிடக்கூடாது. அரசின் பத்திரப்பதிவு துறை இணையதளத்தில் பட்டா உங்கள் பெயரில் தான் இருக்கிறதா? என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்வது நல்லது.










    வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.