', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வெப்பத்தை தடுக்கும் ‘டைல்ஸ்’


    வெப்பத்தை தடுக்கும் ‘டைல்ஸ்’
    பதிவு செய்த நாள் : Apr 05 | 12:00 am



    கோடைகாலம் என்றாலே வெப்பத்தின் பிடியில் தவிக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாததாகிறது. பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதை தடுக்க மின் சாதனங்கள் இயங்கினாலும் கூட பல வீடுகள் எதாவது ஒரு வழியில் வெப்ப சூழலை உமிழும்படியாகவே அமைந்திருக்கும்.

    வெப்ப தாக்கம்

    ஆகையால் வீட்டை அழகிய டிசைனுடன் வடிவமைத்து கட்டுவதற்கு மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. அது அனைத்து வகையான பருவகால நிலைகளுக்கும் தாக்குப்பிடித்து கம்பீரமாக வெளிப்புறத்தில் எழுந்து நிற்கும் வகையில் கட்டப்படுவது போலவே உள்புறமும் அமைக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக கோடைகால வெப்ப பாதிப்புகள் வீட்டு உள் அறைகளை ஆக்கிரமிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அது வீட்டில் இருப்பவர்களை தவிப்புக்குள்ளாக்க வைத்துவிடும். வீட்டுக்குள் அலங்கார வடிவிலோ, வேறு வகையான முறைகளிலோ மாற்றங்களை செய்ய முயற்சிகள் எடுத்தாலும் வெப்ப தாக்கத்தை தடுக்கும் வகையில் அவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வெப்பத்தை தடுக்கும் டைல்ஸ்கள்

    வீட்டுக்குள் நுழையும் அனலின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதை விட அவை உட்புகாதவாறு தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பெரும்பாலும் வீட்டின் மேற்கூரைகள் வழியாகவே வெப்பம் அதிகமாக உமிழப்படும். அவ்வாறு வெப்பம் ஊடுருவதை தடுத்தாலே அறைக்குள் மிதமான சூழலை ஏற்படுத்த முடியும். அதனால் தான் மேற்கூரை தளத்தை வெப்பம் உள்வாங்காதவாறு அமைப்பதற்கு அதிக சிரமம் எடுத்துக்கொள்கிறார்கள்.

    சமீபகாலமாக மேற்கூரை தளம் அமைப்பதிலும் புதுமைகள் புகுந்து இருக்கிறது. அங்கு தள செங்கல்கள் பதிக்கப்படுவதற்கு பதிலாக டைல்ஸ்களை அமைக்கும் முறை பரவலாக பரவி வருகிறது. இத்தகைய டைல்ஸ்கள் அறைக்குள் அதிக அளவில் அக்னி கலந்த வெப்ப சூழல் உள்நுழைவதை தடுத்து நிறுத்துவதில் பங்கெடுக்கின்றன.

    பசுமை கட்டுமான பொருள்

    இவற்றுள் பல டைல்ஸ் ரகங்கள் பசுமை கட்டுமான பொருட்கள் தயாரிப்பு முறையை பின்பற்றியும் வடிவமைக்கப்படுகின்றன. இயற்கை கனிமங்களான மெக்னீசியம், சிலிக்கா, பிளை ஆஷ், நார் பொருட்களை கொண்டும் சில டைல்ஸ் ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பசுமை பொருட்களை கொண்டவையின் கலவையாக இருப்பதால் அறைக்குள் அதிகமாக வெப்பம் உள்நுழைவதை தடுத்து நிறுத்துகிறது.

    அதனால் அறைக்குள் வெப்பக்காலத்தில் அதிக அனல் பரவாமல் குளுமையான சூழல் அதிகரிக்க வழிவகுக்கிறது. இத்தகைய டைல்ஸ்களை மேல்தளத்தில் வழக்கமான தள செங்கல்களை போலவே எளிதில் பதிக்கலாம். வெள்ளை நிறத்தில் காணப்படும் இவை பார்ப்பதற்கும் பளிச்சென்று அழகாக காட்சி தருகின்றன. இவற்றை பதிப்பதற்கும் அதிக செலவு ஆகாது. அதிக காலமும் தேவைப்படாது. விரைவாகவே பதிக்கலாம்.

    தண்ணீர் உட்புகாது

    பசுமை கட்டுமான தரத்தில் வடிவமைக்கப்படும் இவை நீண்ட நாள் உழைக்கும் திறன் பெற்றவையாகவும் உள்ளன. வெப்பம் உள்நுழைவதை தடுப்பது போலவே தண்ணீர் உட்புகுவதையும் தடுக்கின்றன. இதனால் மேற்கூரைக்கு வலிமை சேர்க்கும் கான்கிரீட் கம்பிகள் துருபிடிக்காமல் பாதுகாக்கப்படுகிறது. தீ தடுப்பு தன்மை பெற்றவையாகவும் விளங்குகின்றன.

    அதன் மூலம் கட்டிடத்தின் ஆயுள் அதிகரிக்கிறது. கோடை காலத்தில் அனலின் பாதிப்பில் இருந்து மீளுவதற்கு ஏற்ற வகையில் அறைக்குள் வெப்பத்தன்மையை 75 சதவீதத்துக்கும் மேலாக உள் நுழையாமல் தடுக்கும் ஆற்றல் பெற்ற இத்தகைய டைல்ஸ்களுக்கு வரவேற்பு அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.