', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    நிலம் கையக்கப்படுத்துதல் மசோதா… ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு

    மும்பை: லோக்சபாவில் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குள் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இதை தாக்கல் செய்த மத்திய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடும், வளர்ச்சி திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும் அளிப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். மேலும் கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலையை போல் 4 மடங்கு இழப்பீடும், நகர்ப்புற நிலங்களுக்கு சந்தை மதிப்பை போல் 2 மடங்கு இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 6 சதவிகித உயர்வு இந்த மசோதா நிறைவேறிய நிலையில் இன்று காலை ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் உயர்வைக் கண்டுள்ளன. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே 5 சதவீத உயர்வை இவை கண்டன. ஆனந்த் ராஜ் இண்டஸ்ட்ரீஸ், இன்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், எச்டிஐஎல், யுனிடெக், பெனின்சுலா, டிஎல்எப் ஆகியவற்றின் பங்குள் 1 முதல் 6 சதவீத உயர்வைக் கண்டுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் ரியால்டி இன்டெக்ஸ் 1.5 சதவீதம் உயர்ந்தது.

    Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/30/india-realty-shares-gain-as-lok-sabha-passes-land-acquisition-bill-182405.html

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.