', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    சென்னையில் அமையும் ஆடம்பர குடியிருப்பு திட்டம்

    சென்னையில் அமையும் ஆடம்பர குடியிருப்பு திட்டம்



    சென்னையை அடுத்த வண்டலூர்–கேளம்பாக்கம் ரிங் சாலைக்கு பின்புறம் ஓ.எம்.ஆர். மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரு முக்கிய சாலைகள் செல்லும் பகுதியில் ‘ஆர்த்தா’ ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் அமைக்கப்படுகிறது. சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த ‘ஒன் வேல்ட்’ குடியிருப்பு 140 வில்லாக்கள், 325 ஸ்கை வில்லாக்கள் மற்றும் 125 ஹோட்டல் ரெசிடன்சிகளால் ஆடம்பரமாக அலங்கரிக்கப்படுகிறது. இந்த வில்லாக்கள் சுமார் ரூ.3 கோடியில் இருந்து 3 வேறுபட்ட விற்கக்கூடிய 4,251– 6890 சதுர அடிகள் வரம்புக்குள் இருந்து தொடங்குகிறது. ஸ்கை வில்லாக்கள் ரூ.75 லட்சத்துடன் 2,012 சதுர அடிகளில் இருந்து தொடங்குகிறது.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த ஒன்வேல்டில் வரவேற்பு சேவைகள், பேஸ்மெண்ட் டான்ஸ் தளம், ரெஸ்டாரண்ட் மற்றும் கபே, பேக்கரி, நூக் ஷாப், ஸ்கோஷ் கோர்ட், ஷட்டில் சேவை. கேமிங் லாங்ஜ் மற்றும் மேம்பட்ட தரத்தில் ஜிம்முடன் கிளப் ஹவுஸ், உலகத்தரமான நீச்சல் குளம், காக்டெயில் லாங்ஜ், ஹுக்கா லாங்ஜ், திராபடிக் ஸ்பா, டைனிங் ஹால் உள்ளிட்ட உலக தரத்திலான ஆடம்பர வசதிகள் இடம்பெற உள்ளன. இதற்காக நான்கு சர்வதேச வடிவமைப்பாளர்களால் உலகளாவிய வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையில் இந்த ஆடம்பர குடியிருப்பு வடிவமைக்கப்படுகிறது என்று ஆர்தா குழும நிர்வாகி சுரேஷ் ரங்கராஜன் தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.