', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    கட்டுமான செலவை கட்டுப்படுத்தும் கான்கிரீட் ரகம்

    கட்டுமான செலவை கட்டுப்படுத்தும் கான்கிரீட் ரகம்

    கட்டுமான பணிகளில் கான்கிரீட்டின் பங்கு இன்றியமையாதது. தரைத்தளம் முதல் மேல் தளம் வரை ஒவ்வொரு கட்டப்பணிகளிலும் ஏதாவது ஒரு வகையில் கான்கிரீட் இடம்பெற்று விடுகிறது. அதிலும் தரைத்தளம் அமைக்கும் பணியில் கான்கிரீட் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கான்கீரீட் தூண்களாக மாறி கட்டிடத்தை கம்பீரமாக எழுந்து நிற்கச் செய்கிறது.
    வழவழப்புடன் காட்சி தரும்
    அதுபோல் கட்டிடத்தின் மேற்கூரையை முழுவதுமாக நிரப்புவதற்கும் கான்கிரீட் தான் பயன்படுகிறது. தற்போது கான்கிரீட்டுகளில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்து கொண்டே இருக்கின்றன. ‘பிரீ காஸ்ட்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதில் இருந்து கான்கிரீட் பல்வேறு பயன்பாடுகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
    அவற்றில் ஒரு வகையாக ‘கான்கிரீட் கவுண்டர் டாப்’ என்ற வடிவில் மிளிருகிறது. கட்டுமான செலவை கட்டுப்படுத்தும் இது ‘டேபிள் டாப்’ எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக கான்கிரீட்டின் மேல் பகுதி சொரசொரப்பு தன்மையுடன் இருக்கும். அது வழவழப்பு தன்மை கொண்டதாக மாறி காட்சி தருவது தான் இந்த வகை கான்கிரீட் ரகத்தின் சிறப்பம்சமாகும்.
    சமையல் மேடைகள்
    இவை பார்ப்பதற்கு கிரானைட் கற்களை போலவே வழவழப்பான மேற்பரப்பை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் வீடுகளில் அலமாரிகள், மேடைகள் போன்றவை அமைக்க இந்த கான்கிரீட் கவுண்டர் டாப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சமையல் மேடைகள் அதிக அளவில் அமைக்கப்படுகின்றன. அவை பார்ப்பதற்கு அழகாக ஜொலிக்கின்றன. மேடையின் மேல் பகுதி வழவழப்பாக தோன்றினாலும் அதில் எளிதில் கீறல் ஏற்படாது. அந்த அளவிற்கு உறுதி தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
    மேலும் இந்த கவுண்டர் டாப் சமையல் மேடைகள் அதிக வெப்பத்தை தாங்கக்கூடியவை. அதனால் வெப்பம் நிறைந்த சமையல் அறைகளுக்கு இவை ஏற்றவை. கான்கிரீட்டின் ஒரு அங்கமாக இருப்பதால் இந்த சமையல் மேடைகள் மற்றவற்றை விட பலம் பொருந்தியவை. இந்த கவுண்டர் டாப்புகள் பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கின்றன. அதனால் அறைக்கு ஏற்ற, மனம் கவர்ந்த வண்ணமுடைய கவுண்டர் டாப்புகளை கொண்டு அலங்கரிக்கலாம்.
    மெழுகு பூச்சு அவசியம்
    இவை பெரும்பாலும் ஒரே அளவுகளில் கிடைக்கின்றன. எனினும் சமையல் அறையின் பரப்பளவுக்கு ஏற்புடைய அளவுகளிலும் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். தற்போது சமையல் அறை அளவு, அதில் இடம்பெறும் மேடையின் அளவை கணக்கிட்டும் தயாரிக்கப்படுகின்றன. இந்த கவுண்டர் டாப்புகள் பளப்பளப்புடன் காட்சி தருவதற்கு ஒரு வகை மெழுகு பூச்சு மேற்பரப்பில் பூசப்படுகிறது. அந்த பூச்சு பொலிவை இழக்காதவரை சமையல் மேடை அழகுடன் காட்சி தரும்.
    ஆகையால் பொலிவை தக்க வைக்க மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது மெழுகு பூச்சு மேற்கொள்ள வேண்டியது இருக்கும். மேலும் மேற்பரப்பில் கீறல் விழாது என்றாலும் காய்கறிகளை வைத்து நறுக்கும்போது கத்தியால் வெட்டப்படும் தடம் பளிச்சென்று தெரியும். ஆகையால் இந்த கவுண்டர் டாப் சமையல் மேடையில் காய்கறிகளை நறுக்குவதை தவிர்க்க வேண்டும்.
    பராமரிப்பு முக்கியம்
    பருவகால நிலை மாறுபடும்போதும் அதன் பாதிப்பு கவுண்டர் டாப்பிலும் எதிரொலிக்கும். எனவே கவனமாக பராமரிக்க வேண்டும். மேலும் இந்த கான்கிரீட் டாப்புகளை வழக்கமான டிடர்ஜெண்ட் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. சரியான ‘டிஷ்வாஷ்’ திரவங்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
    அதுபோல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது கான்கிரீட் டாப் பொருந்தியுள்ள பகுதியை மறு ஒட்டுப்பணி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பளபளப்பு குறையாமல் சமையல் அறைக்கு அழகு சேர்ப்பதாக அமையும். எனவே கவுண்டர் டாப் சமையல் மேடைகளை அமைப்பதில் இருக்கும் ஆர்வம் அதை பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அறையின் அழகும், மேடையின் பொலிவும் குறைபடும்

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.