', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வடசென்னையில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்


    வடசென்னையில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்



    வட சென்னை பகுதியான எண்ணூர் அத்திப்பட்டில் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா ஸ்டரக்சுரல்ஸ் கட்டுமான நிறுவனம் புதிய குடியிருப்பு திட்டத்தை அமைக்க உள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த குடியிருப்பு வீடுகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திர நிபுணர் யுவராஜ் சவுமா ஆலோசனைப் படி வாஸ்துமுறையில் அமைக்கப்படுகின்றன.

    இதுகுறித்து ஸ்ரீப்ரத்தியங்கிரா ஸ்டர்க்சுரல்ஸ் நிர்வாக பங்குதாரர் ச.சிவராமன் கூறுகையில், தென் சென்னையில் கடந்த 15 வருடங் களாக பல குடியிருப்பு கட்டிடங்களை கட்டி வரும் எங்கள் நிறுவனம் எண்ணூர் துறைமுகம் மூலம் விரிவடைந்த சாலைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பெருக்கதால் வளர்ச்சி அடைந்து வரும் வடசென்னையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் புதிய கட்டுமான திட்டத்தை தொடங்குகிறது. இது அத்திப்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அடிப்படை தேவைகள் எல்லாம் அருகாமையில் அமைந்துள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு கருவி எல்லா குடியிருப்புகளிலும் அமைய இருக்கிறது என்று தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.