', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    தோல்வி என்பது சிறந்த ஆசீர்வாதம்





    தோல்வி என்பது சிறந்த ஆசீர்வாதம்


    redhilsrealestateagency.wordpress.com
    1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் !
    1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் !
    2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் !

    உலக சரித்திரத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் மறக்க முடியாத சோகமான ஆண்டுகளாக சில ஆண்டுகள் இருக்கும். அந்தவகையில் 2009 ஈழத் தமிழினத்தின் மனத்தில் இருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். 1956, 1983 ஆகிய இரு ஆண்டுகளும் சிங்கள இனவாதிகளின் கொடுந்தாக்குதலால் துயர் சுமந்த ஆண்டுகளாக பதிவு பெற்றது போல 2009ம் பதிவு பெறுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும் சுமார் 26 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டு வருகிறது.

    எனினும் இந்த மூன்று கலவர ஆண்டுகளும்தான் ஈழத் தமிழருக்கு உலக முக்கியத்துவத்தைக் கொடுத்த ஆண்டுகளாகும். 1956 கலவரமும், தனிச்சிங்கள சட்டமும் சிங்களவருடன் இணைந்து வாழ முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்த ஆண்டுகளாகும். 1983 யூலைக்கலவரம் ஈழத் தமிழ் மக்களை உலகம் பூராவும் பரவச் செய்து புலம் பெயர் தமிழர் என்ற சக்தி மிக்க தமிழ் மரத்தை நாட்டிய ஆண்டாகும். 2009 ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்களவர்கள், இந்திய நடுவண் அரசு மட்டும் எதிரிகளல்ல, ஐ.நாவும், அதன் குடையின் கீழ் உள்ள 32 உலக வல்லரசுகளுமே எதிரிகளாக நின்றன என்ற உண்மையை வெளிச்சம் போட்ட ஆண்டாகும்.

    இவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஏன் எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்களை எப்படி சாதகமாக மாற்றலாம்? எதிர் காற்றுக்கு ஏற்ப பாய் மரத்தைத் திருப்பி எப்படி புதுவழி காணலாம் என்ற கோணத்தில்தான் இனி நாம் சிந்திக்க வேண்டும்.

    1956 இனக்கலவரத்தை பண்டாரநாயக்கா தலைமைக் காலத்தில் சுதந்திரக்கட்சியின் சிங்களக் காடையர்கள் நடாத்தினார்கள், 1983 கலவரத்தை ஜே.ஆர் தலைமைக் காலத்தில் யு.என்.பியின் சிங்களக் காடையர் நடாத்தினார்கள். 2009 வன்னியில் நடந்த நிகழ்வுகள் சிங்களக் காடையர் மட்டுமே மோசமானவர்கள் அல்ல காடையர்களின் கையில்தான் உலக அதிகாரமே இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டது. ஆகவே வெறுமனே சிங்களவரை குறை கூறி வண்டி ஓட்டுவதைவிட உருப்படியாக சிந்திக்க வேண்டுமென்ற செய்தியை இந்த ஆண்டு சொல்லியுள்ளது.

    முட்டைக்குள் இருந்தபோது அதுதான் தடையென குருவி நினைத்தது, அதிலிருந்து வெளியேறி கூட்டுக்குள் வந்தபோது அதுதான் பெரிய தடை என்று நினைத்தது. கூட்டிலிருந்து பறந்தபோது மாபெரும் உருண்டையான உலகத்தைக் கண்டது. எல்லாமே உருண்டைகள்தான் அவை அளவில் மட்டும் வேறுபடுகின்றன என்ற உண்மையைக் கண்டது. அதேபோலத்தான் 1956, 1983, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தமிழர்கள் உலகத்தை மூன்று விதமாகக் கண்டார்கள். 2009 அடி மூலம் வரும் உலக மயமாக்கலை வெற்றிகொண்டு வாழ நமக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறதென நம்புவோம்.

    01. முள்ளி வாய்க்காலுக்குள் சிக்குப்பட்ட விடுதலைப் போர் ஆயுதங்களை மௌனிக்க வைத்தது.
    02. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தாலும் வேட்டுக்கள் தீர்க்கப்படும் என்ற செய்தியைச் சொன்னது.
    03. பிரபாகரன் என்ற போராட்டத் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் போனது.
    04. கே.பி கைது செய்யப்பட்டார்.
    05. முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
    06. வன்னி என்ற பெரும் பிரதேசத்தில் இருந்த மூன்று இலட்சம்பேர் சிறைக் கைதிகளாகினர். அந்தக் காலத்தில் ஆபிரிக்காவில் அடிமைகளை பிடித்தது போன்ற கதையை கண் முன் கொண்டு வந்தது.
    07. புலம் பெயர் நாடுகளில் வரலாறு காணாத ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
    08. வெளி நாடுகளிலும் தமிழகம் போல தீக்குளிப்பு ஆரம்பமானது.
    09. தமிழர் கூட்டமைப்பு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பிருந்தது போல பல துண்டுகளாக உடைந்தது.
    10. மாவீரர் சமாதிகள் உடைக்கப்பட்டன.
    11. சரத் பொன்சேகா தேர்தலில் குதித்து புதிய திருப்பத்தை உண்டு பண்ணினார்.
    12. தமிழீழம் அமைப்பேன் என்று தேர்தலுக்காக ஜெயலலிதா பேசிப் பரபரப்பூட்ட அவரை அம்மா தாயே என்று புலம் பெயர் தமிழர் பாராட்டி கடிதமெழுதினர்.
    13. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள் என்றார் புலிகள் இமயமாக நம்பிய சமாதானத் தூதுவர் எரிக் சோல்கெய்ம்.

    இப்படி ஆவீன, மழை பொழிய, மனையாள் மேல் பூதம் வர என்ற பாடல் தமிழர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. 2009 ம் ஆண்டு மறக்க முடியாத பாடங்களைப் புகட்டிச் செல்கிறது…
    ஆனால் தமிழர் சந்தித்த ஆண்டுகளில் மிகச்சிறந்த ஆண்டு 2009தான். தோல்வி என்பது வாழ்வின் மிகச்சிறந்த வழிகாட்டியாகும். எப்படி 1983ஐ வைத்து புலம் பெயர் தமிழர் என்ற புதிய சக்தியை உருவாக்கினோமோ அதுபோல அதைவிட இமாலய சத்தியை உருவாக்க இறைவன் தந்த பாடமே 2009 என்று அதை நம்பிக்கையுடன் எண்ணுவோம். வழமைபோல 2009 ஏ தொலைந்துபோ என்று நம்பிக்கை வரட்சி எழுத்துக்களை எழுத வேண்டாம். விடைபெறும் 2009 விதைத்த ஆண்டு, இனி வருவது அறுவடைக் காலமென நம்பிக்கையுடன் நடப்போம். நம்பிக்கையுடன் 2010 ஐ வரவேற்போம்.
    தமிழினத்தின் 30 வருட மௌனம் மெல்ல மெல்லக் கலைய ஆரம்பித்திருக்கிறது. யாழ்ப்பாண சமுதாயத்தின் மௌனக் கலாச்சாரம் மறைந்து வருகிது. பல்வேறு கருத்துக்களை கட்சிகள் பேசுகின்றன. தமது கருத்துக்களை அடக்கி ஊமைகளாக மக்கள் வாழ்ந்த உளவியல் நோய் அகல்கிறது. இப்படி தீமைகளிலும் பல நன்மைகள் தோன்றுகின்றன. ஆகவே 2010 ஈழத்தமிழருக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இனி சிங்களவரே புலம் பெயர் தமிழரின் பொருளாதாரத்தை நம்ப வேண்டிய புதிய காலமும் உருவாகியிருக்கிறது.

    இந்த எண்ணங்களுடன்,
    அப்பலோவின் பயணத்தை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்..
    முதல் தடவை ராக்கட் வெடிக்கும்போது பூமியில் இருந்து பறக்கிறது.
    இரண்டாவது தடவை வெடிக்கும் போது புவியின் ஈர்ப்பு சக்தியை கடந்து வெளியேறுகிறது.
    மூன்றாவது தடவை பிரியும்போது நிலவின் தரையில் கால் பதிக்கிறது.
    வெடிப்புக்களும், இழப்புக்களும் அழிவுகளல்ல, அவையே முன்னேற்றமென நம்புவோம். 2009 வெடிப்பு ஈழத் தமிழன் சிகரங்களை தொட உதவப்போகிறது என்பதே உண்மை.
    வெற்றி பெற்றதாகக் கூறுகிறவன் அடுத்து சந்திக்கப்போவது தோல்வியைத்தான் !
    தோல்வி அடைந்தவனுக்கு அடுத்து வருவது வெற்றிதான் !
    இதுதான் உலக நியதி…

    தமிழ் மக்களை வழிநடாத்த வேண்டிய புதிய சமுதாய உளவியலாகும்.


    இதோ…
    தோல்வி எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்களை தருகிறோம். தோல்வி என்பது சிறந்த ஆசீர்வாதம் என்ற நூலில் இருந்து எடுத்துத் தரப்படுகிறது.
    —————————————–
    தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ! என்ற நூலில் இருந்து..

    01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.
    02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.
    03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.
    04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.
    05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.
    06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.
    07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பபை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.
    08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.


    09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.
    10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.
    11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.
    12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.
    13. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.