கம்ப்யூட்டர் மனைப் பட்டா!
கிராமப்புற நில ஆவணங்கள் மட்டுமே இதுவரை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. நகரங்களில் உள்ள பகுதிகளில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கம் செய்யும் பணிகள் தேசிய தகவல் மையம் தயாரித்து வழங்கியுள்ள மென்பொருளைக் கொண்டு நடைபெற்று வருகிறது. நகர்ப்புற நில ஆவண படிவத்தில் உள்ள தகவல்களை கணினியில் உள்ளீடு செய்ய ஏற்ற வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற நில ஆவணங்களை கணினிபடுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டை-தண்டையார்பேட்டை, எழும்பூர் - நுங்கம்பாக்கம் மற்றும் மைலாப்பூர் - திருவல்லிக்கேணி வட்டங்களுக்குட்பட்ட ஒரு லட்சம் நகர நில அளவை எண்களுக்கான ஆவணங்கள் கணினிகளில் உள்ளீடு செய்து, நில உடமைதாரர்களுக்கு இந்த ஆண்டு முதல் கணினி வழியாக பட்டா வழங்கவும், இந்த பணிகளை நிறைவு செய்வதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வருவாய்த்துறையின் பணிகள் எளிதாக்கப்பட்டு, நில ஆவணங்கள் சம்பந்தமான மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற வழிவகை ஏற்படும்.
கருத்துகள் இல்லை: