', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    புது வீடு : நில்... கவனி... வாங்கு !






    வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை நடத்திப்பார் என்று சும்மாவாச் சொன்னார்கள்... இன்றைய நிலையில் இடம் வாங்கி வீடு கட்டுவது கொஞ்சம் கஷ்டமான காரியம். கட்டிய வீட்டை வாங்குவது அல்லது பில்டர், இன்ஜினீயர்களிடம் வீட்டை கட்டச் சொல்வதே புத்திசாலித்தனம். கட்டிய வீட்டை வாங்கினாலோ அல்லது கட்ட ஒப்படைத்தாலோ கீழே கூறப்பட்டுள்ளவற்றை நீங்கள் நிச்சயம் கவனிக்கவேண்டும். அந்த விஷயங்கள் என்னென்ன?

    பேப்பர் ஒர்க்!

    'சூப்பரா வீட்டை கட்டித் தந்துடலாம் சார்’ என்று பில்டர்கள் சொல்வதை நம்பாமல், பில்டர்களுடன் போடும் ஒப்பந்தத்தில் வீட்டை கட்டும்போது பயன்படுத்தும் பொருட்களான கதவுகள், ஜன்னல்கள், கழிப்பிட பொருட்கள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் ஆகியவற்றின் தரம், அளவு போன்றவற்றை துல்லியமாக எழுதி வாங்கிவிடவேண்டும்.

    அடிக்கடி விசிட்!

    பில்டர்களிடம் வீட்டை கட்டத் தரும்போது அடிக்கடி திடீர் விசிட் செய்வது அவசியம். பில்டர்தான் கட்டித் தருகிறாரே என்று அந்தப் பக்கம் போகாமல் இருந்துவிடக் கூடாது. வீட்டை கட்டும்முன் மண் சோதனை செய்யும்படி பில்டரிடம் சொல்லி, அந்த ரிசல்டை நீங்கள் வாங்கிப் பார்ப்பது நல்லது.

    லேஅவுட்!

    சாதாரண நபர்களால் கட்டடத்தின் வரைபடம் மற்றும் லேஅவுட் உள்ளிட்டவைகளைப் புரிந்துகொள்ள முடியாது. இதற்குப் பதில் அந்த வரைபடத்தின் நகல்களை வேறு இன்ஜினீயரிடம் காண்பித்து எல்லா விஷயங்களும் சரியாக இருக்கிறதா என தெரிந்துகொள்ள வேண்டும்.

    காங்கிரீட் மிக்ஸ்!

    ஒரு கட்டடத்தின் பலத்தை நிர்ணயிக்கும் பங்கு காங்கிரீட் கலவையில்தான் இருக்கிறது. காங்கிரீட் போட்டபின் அதை சோதனை செய்வதைவிட காங்கிரீட் போடும்முன் கலவை என்ன விகிதத்தில் போடப்போகிறார்கள் என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். முடிந்தால் காங்கிரீட் கலவையின் மாதிரியை லேபில் சோதனை செய்து அந்த முடிவுகளை வாங்கி பார்த்துக்கொள்வதும் நல்லது.

    இறுதி வாய்ப்பு!

    கட்டடங்கள் கட்டி முடிக்கும் தருவாயில் டைல்ஸ், மார்பிள்ஸ் போடுவது, பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட வேலைகள் நடைபெறும். அப்போது டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் தரமானதாகப் போடப்படுகிறதா, பெயின்ட் தரமானதாக அடிக்கப்படுகிறதா என்ற விவரத்தை அறிந்து கொள்ளவேண்டும். இதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் உடனடியாக அதனை மாற்றிபோடும்படி பில்டர் அல்லது இன்ஜினீயரை அறிவுறுத்துவது அவசியம்.

    மூன்றாம் நபர் சான்றிதழ்!

    எந்த ஒரு பில்டரும் தங்களது வேலையை சோதனை செய்ய அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், பணம் போட்டு வீடு கட்டுவது நாம் என்பதால், தரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக்கூடாது. சில பில்டர்கள் தாங்களாகவே முன்வந்து தனிப்பட்ட ஆடிட்டிங் மூலம் கட்டடத்தின் தரத்தை தங்களது வாடிக்கையாளருக்கு நிரூபிக்கிறார்கள். சில பில்டர்கள் சி.ஐ.டி.சி., சி.கியூ.ஆர்.ஏ. தரச்சான்றிதழ் உள்ளிட சான்றிதழ்களை தாங்கள் கட்டும் கட்டடங்களுக்கு வாங்கித் தருகிறார்கள். இதனையும் கேட்டு வீடு கட்டும் நபர்கள் பில்டர்களிடம் வற்புறுத்தலாம்.

    கட்டிய வீட்டை வாங்கும்போது..!

    கட்டிய வீட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி சொல்கிறார் திருச்சி சிவில் இன்ஜினீயரிங் ஃபெடரேஷன் செயலாளர் சுந்தரேசன். ''முதலில் பில்டிங் பிளான் அப்ரூவலை சரிபார்க்க வேண்டும். பில்டிங் உயரம், எஃப்.எஸ்.ஐ. எனச் சொல்லப்படும் ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ் சதவிகிதம் பற்றி அறிந்துகொள்ளவேண்டும். அப்ரூவல் டிவியேஷன் எனச் சொல்லப்படும் கார்ப்பரேஷன் இடத்தை எந்த அளவுக்கு பில்டர் ஆக்கிரமித்துள்ளார், அதில் உங்கள் இடம் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.

    பில்டிங் ஸ்ட்ரக்சர் மற்றும் ஃபவுண்டேஷன் விவரங்களை பெற்று நகல் எடுத்துக்கொள்வது நல்லது. புரமோட்டரிடமிருந்து நேரடியாக வீடு வாங்கும்போது புராஜக்ட் இன்ஜினீயர், ஆர்கிடெக்ட் இன்ஜினீயர், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர் அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு அவர்களின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ளவேண்டும்'' என்றார்.

    தலைமுறை தாண்டி நிற்கப்போகும் வீட்டை நாம் எந்த அளவுக்குச் சரியாக செய்கிறோமோ, அந்த அளவுக்கு எதிர்காலத்தில் கவலை இல்லாமல் இருக்கலாம்.

    ந.விகடன்

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.