', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள்

    வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள்



    கட்டுமானத்தின் நீடித்த உறுதி தன்மையை கான்கிரீட் முறைகளே தீர்மானிக்கின்றன. மாடி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள், தனிநபர் வீடுகள் என வீட்டின் தன்மைக்கு ஏற்றார் போல் கான்கிரீட் பயன்பாட்டு முறைகள் வேறுபடுகின்றன. நிரப்பு முறை, ரெடிமேட் முறை என பல முறைகளில் கட்டுமானத்துக்கு தேவையான கான்கிரீட் நிரப்பப்பட்டு வருகிறது.

    வளையும் கான்கிரீட்

    அந்த வகையில் தற்போது வளையும் திறன் கொண்ட புதிய வகையிலான கான்கிரீட் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ‘என்ஜினியர்ட் சிமெண்டேஷன் காம்போசைட்’ என்று அழைக்கப்படும் இம்முறையில் உருவாகும் கான்கிரீட் கற்கள் சுமார் 40 டிகிரி வரை வளையும் திறன் பெற்றிருக்கின்றது. ‘பைபர் ரீன்போர்ஸ்ட் கான்கிரீட்’ என்ற முறை இந்த வளையும் கான்கிரீட் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இவை நுண்ணிய அளவிலான மூலக்கூறுகள் என்பதால் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் கான்கிரீட்களை மெல்ல மெல்ல எளிதாக வளைத்துக் கொள்ள முடியும்.

    இவை முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘போர்ட்லாண்ட்’ சிமெண்ட் முறைகளின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வளையும் தன்மை கொண்ட கான்கிரீட் தற்சமயம் கட்டுமானத்துறையில் கண்டறியப்பட்டுள்ள விந்தையாகவே கருதப்படுகிறது. இந்த முறையில் கான்கிரீட்டுடன் வெறும் 2 சதவீத அளவிற்கு மட்டுமே பைபர் சேர்க்கப்படுகிறது. இது நானோ–மைக்ரோ–மாக்ரோ முறையில் செயல்பட்டு சுவர்களுக்கு வளையும் தன்மையை கொடுக்கிறது.

    சுவர்களை வளைக்கலாம்

    இதன் மற்றொரு அம்சமாக இதில் உருவாகும் கற்கள், கட்டுமானங்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை பெற்றுள்ளன. இந்த முறையில் உருவாகும் கற்கள் மற்ற கற்களை விட எடை குறைவாக உள்ளன. கான்கிரீட் கலவைகளுடன் கண்ணாடி கழிவுகள், பாலிமர் பொருட்கள் போன்ற எடை குறைவாக மூலக்கூறுகளை கொண்டு இந்த கான்கிரீட் கற்களை தயாரிக்கின்றனர். வளையும் கற்கள் மூலம் கட்டப்படும் கட்டுமானங்கள் எல்லா சமயங்களிலும் வளையும் தன்மையை பெறுவதில்லை. இதற்காக சில வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.

    கட்டமைக்கப்படும் கட்டிடங்களில் வளையும் கற்களின் பங்கு அதிகமாக உள்ளன. கட்டுமானத்துறையில் பொதுவாக வளைந்த சுவர்களை வடிவமைக்க இரண்டு சுவர்களை இணைத்து சற்று வளைவாக கான்கிரீட் சுவர்கள் அமைப்பார்கள். ஆனால் இந்த முறையில் அமைக்கப்பட்ட சுவர்களையே நம் தேவைக்காகவும் அழகிற்காகவும் வளைத்துக் கொள்ள முடியும்.

    விரிசலை தடுக்கும்

    இது இயற்கை அழகினை கொடுப்பதுடன் வீட்டிற்கு எடுப்பான தோற்றத்தை தரவல்லது. மேலும் இதன் வளைப்பு திறன் அதிகரிப்பதால் இதன் கடினத்தன்மையில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவற்றைக் கொண்டு பல இடங்களில் அணைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்து சாதனை படைத்திருக்கின்றனர். இதன் மூலம் வீடுகள் கட்டுவதினால் வீட்டின் தரைமட்டத்தில் (பேஸ்மெண்டில்) ஏற்படும் விரிசல்கள் தடுக்கப்படும்.

    இதில் பைபர் பொருட்கள் பயன்படுத்துவதால் தண்ணீர் உட்புகுதல் மற்றும் நீர் கசிதல் போன்றவையும் தடுக்கப்படுகின்றன. மழைக்காலங்களில் இதன் பயன்கள் குறிப்பிடும் வகையில் இருக்கும்.

    இவற்றை புதிதாக கட்டும் கட்டுமானங்களில் பயன்படுத்துவது போல முன்னதாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களின் மேற்புறங்களிலும் இந்த கலவை முறையை நீர் கரைசல் போல தெளித்து கட்டிடத்துக்கு வலுக்கூட்ட முடியும். தற்போது விரிசல்கல்களை சரிசெய்ய பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவைகளில் இந்த முறை பெரிதும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.