', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    கட்டுமானத்தின் புதிய பரிமாணமாக மிளிரும் அசையும் சுவர்கள்


    கட்டுமானத்தின் புதிய பரிமாணமாக மிளிரும் அசையும் சுவர்கள்



    பதிவு செய்த நாள் : May 03 | 12:00 am



    கட்டுமானத்தின் வலிமையாக விளங்குவது சுவர்கள். இவை கட்டிடத்தின் அழகையும், கட்டுமானத்தின் தரத்தையும் உணர்த்துபவை. செங்கற்களை கொண்டும் கலவையைக் கொண்டும் அடுக்கி அடுக்கி கட்டப்பட்டிருந்த சுவர்கள் தற்போது நவீன வெளிபாடாக ரெடிமேட் முறைகளில் கிடைக்கின்றன. மக்களின் துரித வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் சில கட்டிடங்கள் ரெடிமேட் வகையிலான சுவர்களைக் கொண்டே அமைகின்றன.

    அசையும் சுவர்கள்

    வளைவு நெளிவான சுவர்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் எப்பொழுதும் மக்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெறக்கூடியவை. இவ்வகையான வளைவு சுவர் களுக்கு கைக்கொடுக்கும் விதமாக சந்தைகளில் நுழைந்துள்ளது அசையும் சுவர்கள் எனப்படும் ‘லீகோ’ சுவர்கள். சிறுவர்கள் அடுக்கி விளையாடும் ‘லீகோ’ முறையிலான கட்டமைப்பை தற்போது கட்டுமானத்துறையிலும் உபயோகப்படுத்துகின்றனர்.

    இந்த தொழில்நுட்பம் முறையே ரெடிமேட் சுவர்கள் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது போன்றதாகவே இருக்கிறது. மக்களின் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுகளில் ரெடிமேடாகவே சுவர்கள் கிடைக்கின்றன. இதில் சிறிய மாற்றமாக புத்தகங்களை மடித்து விரிக்கும் முறையை போல் அசைவு தன்மையை இதில் பயன்படுத்தி உள்ளனர்.

    வளைக்கலாம்

    கட்டுமானத்தில் பயன்படுத்தும் முன்னர் மடிப்பு முறையில் இருக்கும் சுவர்களை நம் தேவைக்கேற்ப எல், டி போன்ற வடிவங்களில் மடக்கியும் வளைத்தும் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பத்தில் கட்டுமானத்தின் அடித்தளங்கள் கட்டாயமாக வலுவாக அமைக்கப்பட வேண்டி இருக்கும். அத்தகைய அடித்தளங்கள் அமைக்கப்பட்ட பின்னர் அதற்கு மேல் கட்டப்படும் சுவர்கள், தளங்கள் என அனைத்தையுமே இந்த அசையும் சுவர்களை கொண்டு அமைத்திடலாம்.

    அசையும் சுவர்கள் முழு நீள சுவர்களாகவும், அழகுப்படுத்தும் வகையில் பாதி அளவுகள் கொண்ட சுவர்களாகவும் சந்தையில் கிடைக்கின்றன. சிறிய வீடுகளின் உள்பகுதியில் பயன்படுத்தப்படும் குறைந்த தடிமனிலான சுவர்களும் இத்தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன.

    குறுகிய காலத்தில் பணியை முடிக்கலாம்

    மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் இந்த சுவர்களை பயன்படுத்தலாம். குறுகிய காலங்களில் அமைக்க வேண்டிய கட்டுமானங்களை அசையும் சுவர்களை கொண்டு எளிமையாக அமைத்திடலாம். மேலும் கட்டுமானத்தின் வெளிப்புறங்களில் வளைவான அமைப்புகளை அமைக்க இவ்வகையான கற்கள் மிகவும் பயனுள்ளதாக அமையக் கூடியவை.

    சுவர்களில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான விரிசல்கள் இவ்வகையான சுவர்களில் ஏற்படுவதில்லை. சுவர்களில் தண்ணீர் இணைப்பு பைப்புகள், மின்சார இணைப்புகள் போன்றவற்றை அசைவு தன்மைக் கொண்ட பகுதிகளில் எளிமையாக நுழைத்தும் பிரித்துக் கொள்ளலாம்.

    பல்வேறு வடிவங்களில் கிடைக்கும்

    அசையும் சுவர்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. ஜன்னல், கதவு போன்ற அமைப்புகளிலும் இவை கிடைக்கின்றன. ஜன்னல் அமைப்பு சுவர்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறு,சிறு காலியிடங்கள் உள்ளன. இவற்றை மூடிக் கொள்ளும் வகையிலான அமைப்புகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளை கோடை காலங்களில் திறந்தும் மழைக் காலங்களில் மூடியும் கொள்ளலாம்.

    இவ்வகையான சுவர்களை இணைக்க குறைந்த அளவிலான சிமெண்ட் கலவைகளே பயன்படுகின்றன. இதனால் கட்டுமானத்தை அமைக்கும் செலவுகளும் குறைகின்றன. பிற்காலத்தில் இவ்வகை சுவர்களும் கட்டுமானத்தின் ஒரு அங்கமாக அமையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.