', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வளர்ச்சியடைந்து வரும் கொளத்தூர்

    வளர்ச்சியடைந்து வரும் கொளத்தூர்

    சொந்த வீட்டு கனவை நிஜமாக்க நினைப்பவர்கள் பலரும் சென்னை புறநகர் பகுதிகளில் வசிப்பிடத்தை மாற்றுவது தவிர்க்கமுடியாததாகி விட்ட நிலையில் அதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளும் விரிவாக்கம் அடைந்து வருகின்றன. முக்கியமாக தொலைவில் இருப்பதாக கருதும் இடத்தை துரிதமாக சென்றடைந்து, தூரத்தை சுருக்கும் பங்களிப்பை செய்து வரும் சாலைகள் மேம்பாடு அடைந்து கொண்டே வருகின்றன.
     சாலைகள் மேம்பாடு
    அப்படி சாலை கட்டமைப்பு வசதிகள் பெருகி வரும் பகுதிகள் விரைவான வளர்ச்சியை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை நகரின் முக்கிய பகுதிகளை இணைப்பதில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வரும் ஜி.எஸ்.டி. சாலை செல்லும் வழித்தட பகுதிக்கு அருகில் அமைந்திருக்கிறது கொளத்தூர். அதனால் சற்று தூரத்தில் உள்ள பகுதிக்கு சென்றடைய சந்திக்கும் சிரமம் குறைவதாக இருக்கும் என்பது ஒருபுறம் இருக்க சென்னை புறவழிச்சாலையும் கொளத்தூர் பகுதிக்கு அருகிலேயே செல்கிறது.
     இந்த இரண்டு சாலைகள் வழியாக நகரின் எந்த பகுதிக்கும் துரிதமாக சென்றடையலாம் என்பது கொளத்தூர் பகுதியில் சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவகையில் சாதகமான அம்சமாக விளங்குகிறது. அதிலும் ஜி.எஸ்.டி. சாலை சென்னை விமான நிலையம், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்றடைவதற்கு துணையாக பயணிக்கிறது. கொளத்தூர் பகுதி வழியாக  செல்லும் உள்வட்ட சாலையும் சென்னையின் சில முக்கிய பகுதிகளை இணைப்பதில் பங்கெடுத்து கொள்கிறது.
    அத்துடன் கொளத்தூர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தான் அண்ணாநகர், பெரம்பூர், வில்லிவாக்கம் போன்ற  இடங்கள் இருக்கின்றன. மேலும் வில்லிவாக்கம், பெரம்பூர் ரெயில் நிலையங்களுக்கு துரிதமாக சென்று திரும்பும் வகையில் கொளத்தூர் பகுதி  அமைந்திருக் கிறது. இதனால் பஸ், ரெயில் போக்குவரத்து வசதிகளை கொண்ட பகுதியாக விளங்குகிறது.
    அத்துடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வேலை பார்ப்பவர்கள் வசிப்பிடத்தை தேர்வு செய்வதற்கு ஏற்ற இடமாகவும் தென்படுகிறது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைந்திருப்பதால் அதற்கு ஏற்ப அந்த பகுதியில் கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகின்றன. முக்கியமாக சாலை வசதிகள் முக்கிய பகுதிகளை விரைவாக இணைக்கும் வகையில் மேம்பட்டு வருகின்றன. முக்கியமாக வர்த்தக பகுதியான அண்ணாநகர், தொழிற்சாலை பகுதியான அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகில் அமைந்திருப்பது கொளத்தூர் பகுதியில் பலர் சொத்து வாங்கும் ஆர்வத்தை தூண்டுவதற்கு காரணமாக இருக்கிறது.
    சொத்து மதிப்பு உயர்வு
    இதுதவிர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவும் கொளத்தூர் பகுதியை சூழ்ந்து அமைந்திருக்கின்றன. இப்படி சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த பகுதிகளால் எதிர்காலத்தில் சொத்தின் மதிப்பு எதிர்பார்ப்பதை விட ஏற்றமாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாக விளங்குகிறது. அதுதவிர வீடு கட்டி குடியேறுவதற்கு தேவையான அத்தனை கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட பகுதியாக  இருக்கிறது.
    மேலும் அனைத்து தரப்பு மக்களும் சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதியாகவும் விளங்குவதால் இங்கு சொத்துக்கு மவுசு கூடும் விதமாக இருக்கிறது. முக்கியமாக சாலை கட்டமைப்பு வசதிகளுடன் பள்ளிக்கூடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மகால்கள், மருத்துவமனைகள், வங்கிகள் என தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகள் சூழ்ந்திருக்கின்றன. அதனால் வீடு வாங்குபவர்கள் இந்த பகுதியை  தேர்ந்து எடுப்பது சொத்து மதிப்பு உயர்வுக்கும் ஒருவகையில் அடிகோலுகிறது.
    முதலீடுக்கும் சாதகம்
    கடந்த சில மாதங்களில் சொத்து மதிப்பு சில பகுதிகளில் ஐந்து சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை என்பதால் முதலீடு நோக்கத்தில் வீடு வாங்க முற்படுபவர்களும் கொளத்தூர் பகுதியை தங்கள் தேர்வு பட்டியலில் இடம்பெற செய்துள்ளனர்.
    இதை கருத்தில் கொண்டு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களும் கொளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.