', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வடசென்னையில் குடியிருப்புகள் விலை உயர்வு; தெற்கில் மந்தம்


    வடசென்னையில் குடியிருப்புகள் விலை உயர்வு; தெற்கில் மந்தம்




    சென்னையில், கடந்த ஓராண்டில், குடியிருப்புகளின் விலை, 8 - 10 சதவீதம் உயர்ந்து உள்ளது. குறிப்பாக வடக்கு, மேற்கு பகுதிகளில், குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அங்கு விலை உயர்ந்து உள்ளது. அதே சமயம், அடிப்படை கட்டமைப்பு பணிகள், மந்தகதியில் நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாலிபுரம் சாலை ஆகிய பகுதிகளில், குடியிருப்புகளுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. இதனால், இப்பகுதிகளில், குடியிருப்புகளின் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை என, இந்தியா பிராபர்டி டாட் காம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேடவாக்கம்

    அந்த அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில், குடியிருப்புகளை தேடுவோரின் பார்வை மாறியுள்ளது. அவர்கள், சென்னையின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள, போரூர், மேடவாக்கம், பெரம்பூர், மாதவரம், பள்ளிக்கரணை, கொளத்தூர் பகுதிகளில், வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில், குடியிருப்புகளின் விலை உயர்ந்து உள்ளது.

    கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பு, வேளச்சேரியில், குடியிருப்புகள் அதிகரித்ததை அடுத்து, அருகில் உள்ள, மேடவாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளிலும், குடியிருப்புகளுக்கான தேவை உயர்ந்தது. மேலும், விமான நிலையத்திற்கு அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் அமைந்துள்ள பல்லா வரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில், குடியிருப்புகளின் விலை, இன்றளவும் குறைவாகவே உள்ளது. வண்டலூர் தாண்டி, செங்கல்பட்டு வரை, நிலத்தில் முதலீடு செய்வது சிறந்தது. விரைவில் துவக்கப்பட உள்ள, மோனோ ரயில் திட்டம், சென்னையின் இதர பகுதிகளை, ஜி.எஸ்.டி சாலையுடன் இணைக்க உதவும். வளர்ந்து வரும் பகுதிகளில், குறிப்பாக, கிழக்கு மகாபலிபுரம் சாலையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகள், குடியிருப்போரை ஈர்க்க, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியமானவையாக உள்ளன.

    சாலை வசதிகள்

    குடியிருப்புகளுக்கு எளிதில் செல்லும் வகையில், உட்புற சாலை வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாதது, குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகளில் குறைபாடு, போன்றவை, சென்னை புறநகர்வாசிகளின் குறைபாடுகளில் முக்கியமானவையாக உள்ளன. சென்னையில், பொதுமக்களின் வசதிக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதில், அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும், நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், வெளிவட்டச் சாலை திட்டங்களே இதற்கு சான்று. இத்திட்டங்கள், பூர்த்தியாகும் நிலையில், அனைத்து பகுதிகளிலும், குடியிருப்புகளுக்கான தேவையும், விலையும் அதிகரிக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.