', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    குளியல் அறை தூய்மைக்கு எளிய வழிகள்

    குளியல் அறை தூய்மைக்கு எளிய வழிகள்



    வீட்டில் இருக்கும் அறைகளில் தண்ணீர் பயன்பாடு அதிகம் இருக்கும் அறையான குளியலறை எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தரையில் படியும் ஈரப்பதத்தால் அழுக்குகள், கறைகள் உருவாகும் பட்சத்தில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும். அது வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிப்பதாக மாறிவிடும். அதனால் குளியல் அறையில் இருந்து துர்நாற்றம் எழுந்து விடாமல் இருக்க அதிக அக்கறை செலுத்துவதுண்டு. அறையில் நறுமணம் கமழ வாசனை திரவியங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டுபவர்களும் இருக்கிறார்கள். அது ஒருபுறம் இருக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுத்தம் செய்தும் குளியல் அறையை தூய்மையாக வைத்து கொள்ளலாம். அத்தகைய பொருட்களை பற்றி பார்ப்போம்.


    * குளியல் அறையை சுத்தம் செய்வதற்கு உப்பையும் பயன்படுத்தலாம். அதிலும் தரையில் கறைகள் படிந்திருந்தால் அதை சுலபமான முறையில் போக்குவதற்கு உப்பை உபயோகிப்பதே சிறந்த வழியாகும். தரையில் மஞ்சள் கறைகள் படிந்திருக்கும் இடத்தில் உப்பை நன்றாக தூவி சிறிது நேரம் கழித்து நன்றாக தேய்து கழுவ வேண்டும். பின்னர் வெந்நீரை கொண்டு சுத்தம் செய்தால் நல்ல மாற்றம் தெரியும். அறையில் பரவியிருக்கும் துர்நாற்றமும் விலகும்.


    * எழுமிச்சை பழத்தைக்கொண்டும் குளியல் அறையின் தூய்மையை பேணலாம். அப்பழ சாற்றினை சிறிது தண்ணீரில் கலந்து தரையில் தெளித்து கழுவினால் அதில் படிந்திருக்கும் கறைகள் அகலும்.


    * குளியல் அறை தரைக்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்களுள் பேக்கிங் சோடாவும் ஒன்று. இதனை குளியல் அறை தரையில் தூவி சிறிது நேரம் உற வைக்க வேண்டும். பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி அழுத்தி தேய்த்து கழுவ வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அறையின் தரை பளிச்சென்று ஜொலிக்கும். அதில் அழுக்குகள், கறைகள், பாசி படர்வது போன்றவை தவிர்க்கப்படும்.


    * தரையில் அதிகமாக கறை படிந்து இருக்கிறதா? அப்படி என்றால் சோடாவை உபயோகிக்கலாம். அது கறைகளை அப்புறப்படுத்தும் பொருட்களில் ஒன்றாகவும் இருக்கிறது. அதிக கறைகள் உள்ள இடங்களில் சோடாவை ஊற்றி தேய்த்து கழுவினால் போதும். அறையில் படிந்திருக்கும் கறைகள் நீங்கிவிடும்.


    * குளியல் அறையை இத்தகைய பொருட் களை கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து வருவது துர்நாற்றம் பரவுவதை தடுத்து நிறுத்தும். இருந்தபோதிலும் தினமும் குளியல் அறையை தண்ணீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்து வருவது நல்லது. குளிக்கும்போது வீணாகும் தண்ணீரை கொண்டு தரையை அழுத்தி தேய்து வருவது தூய்மைக்கு வழிவகுக்கும்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.