', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    சொந்த வீடு வாங்குவதற்கு உதவும் சேமிப்பு


    சொந்த வீடு வாங்குவதற்கு உதவும் சேமிப்பு







    -A +A

    பதிவு செய்த நாள் : May 31 | 02:06 am



    சொந்த வீடு வாங்குவது சென்னை நகர்பகுதிகளில் சவாலான விஷயமாகவே இருக்கிறது. புறநகரை நோக்கி குடியிருப்புகள் விரிவாக்கம் அடைந்து வந்தாலும் அங்கும் முக்கிய பகுதிகளில் நகர்பகுதிக்கு இணையாக சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது. அதனால் வீடோ, மனையோ எது வாங்குவதாக இருந்தாலும் லட்சத்தின் இலக்கங்களில் தான் அதன் மதிப்பு நீளுகிறது.

    வீட்டுக்கடன்

    அப்படி இருக்கையில் மொத்தமாக பணத்தை திரட்டி வீடு வாங்குவது என்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. பெரும்பாலானோருக்கு வங்கி கடன்களே ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது. மற்ற கடன்களை விட வீட்டுக்கடனுக்கு வட்டி விகிதம் குறைவாக இருப்பதும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனால் வீடு வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் வங்கிக் கடன்களை நாடுகிறார்கள். இருந்தபோதிலும் வாங்கும் வீட்டுக்கான முழு தொகைக்கும் வங்கிக்கடன் கிடைக்காது.

    வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீத தொகையை கையில் இருந்து தான் செலுத்த வேண்டி இருக்கும். அது தவிர வீடு வாங்குபவர்களின் மாத வருமானத்தை பொறுத்து தான் வங்கிகளின் வீட்டுக்கடன் தொகை மதிப்பீடு செய்யப்படும். அப்படி இருக்கையில் வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நாடினாலும் கணிசமான தொகை கையிருப்பில் இருப்பது அவசியமாகிறது. அந்த தொகையை திரட்டுவதற்கு சேமிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அதற்கு முன்பு வீட்டை எத்தனை வருடங்களுக்குள் வாங்கப்போகிறோம் என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

    சேமிப்பிற்கு முக்கியத்துவம்

    அந்த இடைப்பட்ட காலத்திற்குள் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாதம் ஒரு தொகையை வீடு வாங்குவதற்கான கணக்கில் சேமித்து வர வேண்டும். அப்படி சேமித்து வரும் தொகையானது ஓராண்டுக்குள் கணிசமாக உயர்ந்திருக்கும். இருந்தபோதிலும் அந்த தொகை வீடு வாங்குவதற்கான தொகையின் மதிப்பில் மிகக் குறைந்த அளவாகவே இருக் கும். ஆகையால் சேமிக்கும் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பிட்ட ஆண்டுக்குள் சேமிப்பு தொகையை கணிசமாக உயர வைக்க முதலீடு திட்டங்கள் கைக்கொடுக்கும். குறிப்பாக ‘பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்டு’களில் முதலீடு செய்யலாம். இதில் செய்யும் முதலீட்டுக்கு மற்ற சேமிப்பு திட்டங் களில் கிடைக்கும் வட்டித் தொகையை விட அதிக தொகை கிடைக்கும். அதன் மூலம் ஓரளவு கணிசமான தொகையை திரட்டலாம். எனினும் எத்தனை வருடங்களில் முதலீடு செய்கிறோம். எத்தனை வருடங்களில் வீடு வாங்கப்போகிறோம் என்பது பற்றி முதலிலேயே திட்டமிட்டு முடிவு எடுக்க வேண்டும்.

    முதலீட்டில் கவனம்

    முதலீடு திட்டங்களும் ஏற்றத்துடன் இருக்கிறதா? என்பதை கவனித்து அதற்கு ஏற்ப முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் மாத வருமானத்தை கணக்கில் கொண்டு முதலீடு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். வருமானத்தில் அதிக தொகையை முதலீட்டுக்கு ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும். சேமிப்பின் ஒரு பகுதியாக தான் அவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் முதலீடு செய்வ தால் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்குமா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற முதலீடு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    இதுதவிர வீடு வாங்குவதற்கு சேமிக்க தொடங்குவதற்கு முன்பு வேறு ஏதும் கடன்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி கடன் வாங்கி இருந்தால் அந்த கடன்களை முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அந்த கடனுக்கு வட்டி எகிறிக்கொண்டே இருக்கும். அது சேமிக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியை விட அதிகமாக தான் இருக்கும் என்பதால் சேமிப்பது வீணாகி விடும்.

    கடன் வாங்க கூடாது

    எனவே முதலில் வாங்கிய கடனை திரும்ப செலுத்திய பிறகு வீடு வாங்குவதற்கு சேமிப்பது தான் நன்மை தருவதாக அமையும். மேலும் வீடு வாங்குவதற்காக மற்றவர்களிடம் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். அதாவது வீடு வாங்குவதற்கு நாம் கையில் இருந்து செலுத்த வேண்டிய தொகையை திரட்ட கடன் வாங்கக்கூடாது.

    அந்த தொகையை சேமிப்பின் மூலமே பெற வேண்டும். அதை தவிர்த்து மற்றவர்களிடம் கடன் வாங்கினால் வட்டித்தொகை அதிகமாகவே திரும்ப செலுத்த வேண்டி இருக்கும். ஏற்கனவே வங்கியில் வாங்கும் கடனுக்கு மாதத்தவணை தொகை செலுத்த வேண்டி இருக்கும் நிலையில் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தி விடும். இதனால் மாத வருமானத்தின் பெரும் பகுதி கடனை திரும்ப செலுத்துவதற்கே செலவாகி விடும். பொதுவாக மாத வருமானத்தில் சுமார் 40 சதவீதத்துக்கு மேல் கடன் தொகைக்கு செலவிடுவது சிரமத்தை ஏற்படுத்தி விடும்.



    வீட்டுமதிப்பு உயரும்

    மாத குடும்ப பட்ஜெட்டுக்கு இடையூறாக இல்லாத வகையில் திருப்பி செலுத்தும் கடன் தொகையின் அளவு இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப வீட்டுக்கடனுக்கான தவணை காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதர கடன்களை வாங்குவதை தவிர்க்கவும் வேண்டும். அதற்கு வீடு வாங்குவதற்கு முதல்படியாக சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக நல்ல வருமானம் வரும் நிலையில் இருக்கும்போதே திட்டமிட்டு சேமித்து வீடு வாங்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

    ஏனெனில் கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் வீட்டின் மதிப்பும் இனி வரும் காலங்களில் உயர்வை நோக்கியே இருக்கும் பட்சத்தில் காலம் கடந்து வீடு வாங்க நினைப்பது மேலும் சிரமத்தையே தரும். ஆகையால் விரைவாக வீடு வாங்குவது வரும் காலங் களில் வீட்டின் மதிப்பை உயர்த்துவதாகவே இருக்கும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
    google_ad_client = "ca-pub-9007788194538512"; google_ad_slot = "7929814787"; google_ad_width = 970; google_ad_height = 90; ">

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.