', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    கான்கிரீட் கலவை தயாரிப்பில் கவனம் அவசியம்

    கான்கிரீட் கலவை தயாரிப்பில் கவனம் அவசியம்

    கட்டிடத்துக்கு வலிமை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை கான்கிரீட்டுகள். இவை கட்டுமான பணியில் ஒரு அங்கமாக விளங்குகின்றன. கான்கிரீட்டின் உறுதி தன்மையை பொறுத்தே கட்டிடத்தின் ஆயுள் நிர்ணயிக்கப்படுவதால் கான்கிரீட் கலவை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிமெண்டு, மணல், ஜல்லி போன்றவைகளை கலக்கும் போது அதன் அளவைகள் சரியானதாக இருக்கிறதா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
    அளவு சரியாக இருக்க வேண்டும்
    இவைகளை சேர்ப்பது தான் கான்கிரீட் கலவை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் கலந்து தயாரிக்கலாம் என்பது சரியான முறை அல்ல. ஒரு பங்கு சிமெண்டு, இரண்டு பங்கு மணல், 4 பங்கு ஜல்லி என்ற விகிதத்தில் சேர்க்கப்படுவது தான் கான்கிரீட் கலவை தயாரிப்பில் சரியான நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த அளவைகள் அதிகரித்து விடாமலோ அல்லது குறைந்து விடாமலோ பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் அளவைகளின் ஏற்படும் சிறு மாறுபாடும் கட்டிடத்தின் இஸ்திர தன்மையை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
    இந்த கலவைகளுடன் சேர்க்கப்படும் தண்ணீரும் மிகையாகாமல் இருக்க வேண்டும். தண்ணீரின் அளவு குறைவதும் கான்கிரீட்டின் தரத்தை பாதிக்கும். ஏனெனில் சிமெண்ட் கலவையுடன் தண்ணீரை கலக்கும் போது சிமெண்டு ரசாயன மாற்றத்துக்கு உட்பட்டு சுருக்கமடையும். அப்போது தண்ணீரின் அளவு சரியானதாக இருந்தால் தான் சிமெண்டுக்குள் காற்று புகாமல் இருக்கும். அதையும் மீறி காற்று புகுந்து வெற்றிடம் உருவானால் அந்த கான்கிரீட் கலவையின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி விடும்.
    கவனிக்க வேண்டும்
    அதன் தாக்கம் கட்டிடத்தில் எதிரொலிக்கும். அது விரிசலாகவோ அல்லது கட்டிடத்தின் தரத்தை கேள்விக்குறியாக்குவதாகவோ மாறும். ஆகவே சேர்க்கப்படும் சிமெண்டு அளவிற்கு பாதி தண்ணீர் சேர்க்கப்பட வேண்டும். தண்ணீரின் அளவு குறைந்தாலும் கலவை உதிரி தன்மை உடையதாக மாறிவிடும். அதனால் கான்கிரீட் வலிமை குறைபடும். சில வேளைகளில் சிமெண்டு, மணல் கலவைகளுடன் சேர்க்கப்படும் ஜல்லிகள் நீருடன் கலந்து ஒன்று சேராத நிலையில் இருக்கும். அதுவும் கான்கிரீட் கலவைக்கு பங்கம் விளைவிப்பதாக மாறும்.
    பெரும்பாலான இடங்களில் இயந்திரங்களை கொண்டே கான்கிரீட் கலவை தயாரிக்கப்படுகின்றன. அதனால் கான்கிரீட் சரியான விகிதத்தில் கலந்து இருக்கும் என்று சொல்லி விட முடியாது. அந்த இயந்திரத்தை கையாளுபவர் சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணீரின் அளவு சரியாக கலக்கப்படுகிறதா என்பதை கவனித்தால் தான் கான்கிரீட் கலவை கச்சிதமாக பொருந்தி இருக்கும். அதனால் எந்த முறையில் கான்கிரீட் கலவை தயாரிக்கப்பட்டாலும் அவை சரியாக கலக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
    உப்பு நீர் கூடாது
    அது தவிர தயாரிக்கும் கான்கிரீட் எத்தகைய கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது என்பதை பொறுத்து அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் அளவுகள் மாறுபடும். அதற்கு ஏற்ப கலவை முறை தயாரிப்பு அமைய வேண்டும். அதுபோல் கான்கிரீட் கலவை தயார் செய்யப்படும் இடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சூரிய ஒளி அதிகம் விழும் பகுதியில் கலவை தயாரிப்பதை தவிர்க்க வேண்டும். அந்த இடத்தில் தயாராகும் கலவையில் இருக்கும் தண்ணீர் ஆவியாகும் என்பதால் கான்கிரீட்டின் தன்மை மாறுபட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
    மேலும் கான்கிரீட் கலவையில் சேர்க்கப்படும் தண்ணீரையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த தண்ணீர் உப்பு தன்மை கொண்டதாக இருக்கக் கூடாது. சிலர் கான்கிரீட் கலவைக்கு தானே என்று தண்ணீரின் தன்மையை பரிசோதிக்காமல் இருந்து விடுவது உண்டு. அதை தவிர்த்து உப்பு தண்ணீர் அல்லாத நல்ல தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதில் அலட்சியம் செய்வதும் கட்டிடத்தின் வலிமையை பாதித்து விடும். எனவே கான்கிரீட் கலவை தயாரிப்பு முறையை கண்காணிப்பது அவசியம்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.