', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    முதல்வர் பசுமை வீடு திட்டத்துக்கு சு-காம் நிறுவனத்தின் மின்னுற்பத்தி கருவிகள்


    தமிழக முதல்வரின் பசுமை வீடுகள் அமைக்கும் திட்டத்துக்கு சூரிய ஒளியில் செயல்படும் 10 ஆயிரம் மின்னுற்பத்தி சாதனங்களை ஏழு மாவட்டங்களில் சு-காம் நிறுவனம் அமைத்திருக்கிறது.
    இது குறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் முதல்வர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் வீடுகளில் சு-காம் நிறுவனத்தின் சூரிய ஒளி மின்னுற்பத்தி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள், அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன. இம்மாத இறுதிக்குள் மேலும் 2,500 பசுமை வீடுகளில் மின்னுற்பத்தி கருவிகள் அமைக்கப்படும்.
    அடுத்த கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 27 ஆயிரம் பசுமை வீடுகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி கருவிகளை சு-காம் அமைக்கவுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    2016-ஆம் ஆண்டுக்குள் மூன்று லட்சம் பசுமை வீடுகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.