', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டு கடன் வாங்க எந்த பேங்குக்கு போகலாம்???





    வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பார் என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டு இருப்போம். ஒரு வீட்டை கட்டுவது அவ்வளவு கடினமா என்று நீங்கள் கேட்களாம் உண்மை தான் வீடு கட்டுவது என்பது சாதரண காரியம் இல்லை. ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறி வங்கிகள் வீட்டு கடன் திட்டம் என கூவி கீவி கொடுக்கிறார்கள். இதற்கு தகுந்தார் போல் கட்டுமான நிறுவனங்களும் பல திட்டங்களை அறிமுகம் செய்கிறார்கள். சில உங்கள் பார்வைக்கு 3 மாதங்களில் வீடு, 6 மாங்களில் வீடு, தவணை முறை வீடு, ரெடிமேட் வீடு இன்னும் பல.

    சமீபத்தில் சில வங்கிகள் மற்றும் வீட்டுவசதி கடன் நிறுவனங்கள் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன. வட்டி விகிதத்தில் ஒரு சிறிய மாற்றம் கூட கடன் பெறுவோருக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். எனவே பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

    இவ்வங்கி, ரூ.30 லட்சம் ருபாய் வரையில்லான கடன்களுக்கு ஆண்டிற்கு மாறும் தன்மையுடைய 10.30 சதவிகித வட்டியையும் அதற்கு மேலான தொகைக்கு ஆண்டிற்கு 10.50 சதவிகித வட்டியையும் வசூலிக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அடிப்படை வட்டி விகிதம் 10 சதவிகிதமாக இருக்கும்.

    ஹெச்டிஎஃப்சி நிறுவனம்

    ரூ.30 லட்சம் வரையுலான வீட்டுக் கடன்களுக்கு இந்நிறுவனம் 10.5 சதவிகிதத்தையும், அதற்கு மேல் 75 லட்சத்திற்குட்பட்ட தொகைக்கு 10.75 சதவிகிதத்தையும் ஆண்டிற்கு வட்டியாக வசூலிக்கிறது.

    பேங்க் ஆப் பரோடா

    இவ்வங்கி, கால அல்லது தொகை வரையறையற்ற ஒரு அடிப்படை வட்டி விகிதமாக 10.25 சதவிகிதத்தை நிர்ணயித்துள்ளது.

    ஐசிஐசிஐ வங்கி

    ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு மாறும் வட்டி விகிதமாக 10.40 சதவிகிதம் அதாவது அடிப்படை விகிதமான 10 சதவிகிதத்திலிருந்து 0.40 சதவிகிதம் வரை அதிகமாக நிர்ணயித்துள்ளது. 30 லட்சத்திற்குமேல் 3 கோடி ரூபாய்க்குள் உள்ள கடன்களுக்கு 10.65 சதவிகிதம் வசூலிக்கிறது.


    ஹெச்டிஎஃப்சி

    வங்கி இவ்வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 10 சதவிகிதமாக உயர்வதால் நவம்பர் மாதம் முதல் வீட்டுக்கடன் மாதத் தவணை தொகைகள் உயரவுள்ளன.

    ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்

    இவ்வங்கி அடிப்படை விகிதமான 10.25 சதவிகிதத்திற்கு இணையாக 10.25 சதவிகிதம் வட்டியை ருபாய் 75 லட்சம் வரையிலான கடன்களுக்கு வசூலிக்கிறது. அதற்கு மேல் 3 கோடி ரூபாய் வரை 10.75 சதவிகிதம் வட்டியும் (அடிப்படையில் 0.50 சதவிகிதம் அதிகம்) வசூலிக்கிறது . 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தொகைகளுக்கு வட்டி விகிதம் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.