', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டில் வெளிப்பகுதியை பராமரிப்பதில் கவனம் தேவை!

    வீட்டில் வெளிப்பகுதியை பராமரிப்பதில் கவனம் தேவை!

    வீட்டின் உள்பகுதியை அனைவரும் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் அலங்கரிக்க வேண்டும் என்று  நினைக்கும் பலர் வெளிப்புறங்களை பராமரிப்பதில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறார்கள். வீட்டின் வெளித்தோற்ற பகுதி தூய்மையாக இருந்தால் தான் வீடு பார்ப்பவர்களுக்கு பொலிவு மங்காமல் காட்சி அளிக்கும். ஆகையால் தனி வீடாகவோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் வெளிப்புறத்தை தூய்மையாக வைப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும்.
    முக்கியமாக குப்பைகள் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். குப்பைகள் சேர்ந்தால் அது வீட்டின் உள்புற தூய்மைக்கு பங்கம் விளைவிப்பதாய் அமையும். வெளிப்புறத்தில் இருந்து கிளம்பி வரும் தூசு அலங்கார பொருட்களின் மீது படிந்து அதன் அழகை குறைத்து விடும். நமது உடல் ஆரோக்கியத்துக்கு இடையூறாக மாறி விடும். ஆகையால் வீட்டுக்குள் தூசி கிளம்பாமல் இருக்க வெளிப்பகுதியில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
    ஜன்னல், கதவுகளில் திரைச்சீலைகளை தொங்க விடுவதும் தூசுக்கள் வீட்டுக்குள் சேராமல் தடுக்கும். மேலும் ஜன்னல் கிரில்களை அவ்வப்போது சுத்தம்  செய்து வர வேண்டும். வாசல் கதவுகளையும் அடிக்கடி துணியால் துடைத்து வர வேண்டும். அதுபோல் வீட்டின் வாசல் பகுதிகளில் செருப்புகள் அங்கும் இங்கும் சிதறி கிடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    ஒரு இடத்திலேயே செருப்புகளை வைக்க வேண்டும். அதைவிட ஸ்டாண்ட் வாங்கி வைத்து அதில் செருப்புகளை அடுக்கி வைக்க வீட்டில் உள்ளவர்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் வெளிப்புற பகுதி ஒழுங்கற்று இல்லாமலும், தூசு படியாமலும் பளிச்சென்று தென்படும். வாசலுக்கு வெளியே கால் மிதிப்பதற்கு போடப்பட்டிருக்கும் மிதியடியில் தூசு சேராமல் தினமும் சுத்தப்படுத்த வேண்டும். வாரம் ஒருமுறை நீரில் அலசி சுத்தம் செய்தும் நல்லது.
    வீட்டின் முன்பகுதியில் மரங்கள் வளர்த்தால் அதில் இருந்து விழும் காய்ந்த  இலைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி விட வேண்டும். தொட்டியில் செடிகள் வளர்த்தாலும் ஒரே இடத்தில்  வைக்க கூடாது. அதன் அடிப்பகுதியில் மண் துகள்கள் சேர்ந்தும், நீர் துவாரங்கள் வழியாக நீர் வெளியேறியும்  தரையில் கறை படிந்து அழகை கெடுத்து விடும். அதனால் தொட்டிகளை வாரம் ஒருமுறையாவது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றி தரையை சுத்தமாக வைத்து கொண்டால் வெளிப்பகுதி அழகிய செடிகளுக்கு  இணையாக தனித்துவத்துடன் காட்சி தரும்

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.