தேவையை சமாளிக்க கட்டடங்கள் இல்லை
தேவையை சமாளிக்க கட்டடங்கள் இல்லை
புதுடில்லி:'இந்தியாவில், வரும் 2030ம் ஆண்டிற்கு தேவைப்படும் பலதரப்பட்ட கட்டடங்களில், 70 சத இன்னும் கட்டப்படாமல் உள்ளன' என, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சி.எஸ்.இ.,) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில், மேலும் உள்ள விவரம் வருமாறு:இங்கிலாந்தில், வரும் 2050ம் ஆண்டிற்கு தேவைப்படும் வீடுகள், அலுவலக இடங்கள், வர்த்தக கட்டட ஆகியவற்றில், 80 சதவீத அளவிற்கு ஏற்கனவே கட்டப்பட்டு உள்ளன.
எரிசக்தி:ஆனால் இந்தியாவில், வரும் 2030ம் ஆண்டிற்கு தேவைப்படும் மேற்கண்ட கட்டுமானங்களை பொருத்தவரை, 70 சதவீதத்திற்கு மேல், இன்னும் கட்டப்படாமல் உள்ளன.இந்திய நகரங்கள், விலை மதிப்புள்ள நீரையும், எரிசக்தியையும் அதிக அளவில் செலவழித்து, பெருமளவு கழிவுப் பொருட்களை உருவாக்குகின்றன.
இந்தியாவில், கட்டடங்கள் கட்டுவதற்கு, 40 சதவீத எரிபொருள் செலவாகிறது. மேலும், மூலப்பொருட்களுக்கு 30 சதவீதமும், தண்ணீருக்கு 20 சதவீதமும் செலவிடப்படுகிறது. நிலப் பயன்பாடு, 20 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.இவ்வாறு உருவாகும் கட்டடங்கள் மூலம், 40 சதவீதம் கரியமில வாயு வெளியேறுகிறது. 30 சதவீத திடக்கழிவும், 20 சதவீத கழிவுநீரும் வெளியேறுகின்றன.
இன்னும், 70 சதவீத கட்டடங்கள் கட்டப்படும் போது, இப்பிரச்னை மேலும் தீவிரமாகும். இதை கருத் கொண்டு, கட்டுமான திட்டங்களில் தண்ணீர், எரிசக்தி உள்ளிட்டவற்றை குறைப்பதற்கான, தொழில்நுட்ப கருத்தரங்கு களை நடத்த வேண்டும்.
தலைநகர்:குறிப்பாக, கட்டட வல்லுனர்கள், பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், வீட்டு உரிமையாளர்கள் ஆகியோர் பயன்பெறும் வண்ணம், எரிசக்த சிக்கனம் குறித்த பயிற்சி, பட்டறைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இத்த கைய நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், நாடு கடுமையான பிரச்னைகளை சந்திக்க நேரும்.
குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையின், முக்கிய மையமாகத் திகழும் டில்லி தலைநகர் பிராந்தியம் கடுமையாக பாதிக்கு. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
கருத்துகள் இல்லை: