', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீடு கட்டுவதில் வாஸ்துவின் பங்கு


    வீடு கட்டுவதில் வாஸ்துவின் பங்கு



    வீட்டின் ஒவ்வொரு அறையும் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் பட்டியலிடுகிறது. வாஸ்து முறைப்படி வீடு கட்டுபவர்களுக்கு விதிமுறைகளை வரையறுத்து கூறுகிறது. வீடு கட்ட தொடங்கும்போது வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரங்களில் பணியை தொடங்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஏனெனில் வாஸ்து பகவான் ஒவ்வொரு மாதமும் விழித்திருப்பதில்லை. வருடத்தில் எட்டு மாதங்கள் மட்டுமே விழித்திருக்கிறார். அதுவும் சில நிமிட நேரங்களே வாசம் செய்வார். அந்த நிமிடங்களில் வீடு கட்டுவதற்கு வாஸ்து செய்வது சிறந்தது என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

    * சித்திரை மாதம் 10–ந் தேதி (தமிழ் மாதம்) காலை 8.54 மணி முதல் காலை 9.30 மணி வரை வாஸ்து செய்ய நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    * வைகாசி மாதம் 21–ந் தேதியும் வாஸ்து செய்ய நல்ல நாளாகும். அன்று காலை 9.58 மணி முதல் காலை 10.34 மணி வரை வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்யலாம்.

    * ஆடி மாதம் 11–ந் தேதி அன்றும் கட்டுமான பணியை தொடங்கலாம். அன்றைய தினம் காலை 7.44 மணி முதல் காலை 8.20 மணி வரை நல்ல நேரமாகும்.

    * ஆவணி மாதம் 6–ந் தேதி காலை 7.23 மணி முதல் காலை 7.59 மணி வரையும் வீடு கட்ட வாஸ்து முறைப்படி பூஜை செய்யலாம்.

    * கார்த்திகை மாதம் 8–ந் தேதி காலை 11.29 மணி முதல் மதியம் 12.05 மணி வரையிலும் கட்டுமான பணி தொடங்கலாம்.

    * தை மாதம் 12–ந் தேதி காலை 10.41 மணி முதல் 11.17 மணி வரையிலும், மாசி மாதம் 22– ந் தேதி காலை 10.32 மணி முதல் 11.08 மணி வரையிலும் நல்ல நேரமாகும்.
    * இந்த 8 மாதங்களில் குறிப்பிட்ட நேரத்தில் (தமிழ் மாத தேதி படி) வீடு கட்டுவதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கலாம். அது வீட்டுக்கு நன்மை பயக்கும். அதேவேளையில் இந்த மாதங்களில் வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அது வீட்டின் வாசலை எந்த திசையில் அமைப்பது பற்றியது ஆகும்.

    * சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் வீடு கட்டுபவர்கள் வடக்கில் வாசல் வைப்பது நல்லது.

    * ஆடி, ஆவணி மாதங்களில் வீடு கட்டுமான பணியை தொடங்குபவர்கள் கிழக்கு பார்த்த வாசல் அமைப்பதே நன்மை தருவதாக இருக்கும்.

    * ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வீடு கட்டும்போது தெற்கு பார்த்த வாசல் அமைப்பதே சிறந்ததாக இருக்கும்.

    * தை, மாசி மாதங்களில் மேற்கு பார்த்த வாசல் வைத்து வீடு கட்டலாம். * வாஸ்து முறைப்படி வீடு கட்டும்போது இந்த விதிமுறைகளை பின்பற்றுவது நன்மை பயக்குவதாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.