', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை


    வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை





    பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am



    சொந்த வீடு வாங்க, கட்டுவதற்கு நினைப்பவர்கள் கையில் பணம் சேரும் வரை காத்திருக்கலாம் என்று நினைத்தால் கனவு இல்ல ஆசை தள்ளிப்போய்க்கொண்டே இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதனால் கைகொடுக்கும் வங்கிக்கடன்களையே பலதரப்பினரும் நாடுகிறார்கள். அனைத்து தரப்பு வங்கிகளும் வீட்டுக்கடன் வழங்க ஆர்வம் காட்டுவதும் பலரை வங்கிக்கடனை நோக்கி நகரவைத்திருக்கிறது.

    வருமானத்தின் அடிப்படையில் கடன்

    முறையான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் விரைவாக வங்கி கடன் கிடைக்கும் என்றாலும் அவை வழங்கும் கடன் தொகை கடன் வாங்குபவர் களின் வருமானத்தை கொண்டே கணக்கிடப்படும். அதிலும் கடன் வாங்குபவர்களின் மாத வருமானம் எவ்வளவு என்பது தான் முக்கியமாக கணக் கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த தொகையின் அடிப்படையில் தான் கடன் வழங்க வங்கிகள் முடிவு செய்யும்.

    பொதுவாக கடன் வாங்குபவரின் மாத வருமானத்தை போல 40 முதல் 60 மடங்கு வரை கடன் கிடைக்கும். இது வங்கிக்கு வங்கி சிறிது மாறுபடவும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மாத வருமானத்தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் கடன் கொடுக்கும் தொகையின் மடங்கும் குறைவாகி விடும். மேலும் வங்கிகள் வாங்கப்போகும் வீட்டுக்கான முழு தொகையையும் கடனாக தராது. சுமார் 20 சதவீத தொகையை நாம் கையில் இருந்து செலுத்த வேண்டி இருக்கும். இதனை ‘மார்ஜின் மணி’ என்று சொல்வார்கள்.

    நிதிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும்

    உதாரணத்துக்கு ஒருவர் 20 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்க முடிவு செய்திருக்கிறார் என்றால் அவருக்கு ரூ.16 லட்சம் வரையில் தான் வீட்டுக்கடன் தொகை கிடைக்கும். மீதம் தேவைப்படும் 20 சதவீத தொகையான ரூ.4 லட்ச ரூபாயை அவர் தன் கையில் இருந்து தான் செலுத்த வேண்டும். இந்த ரூ.20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடன் வாங்குவதற்கு மாத வருமானம் சுமார் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும்.

    எனினும் வங்கிகள் தரும் கடன் தொகை தவிர மீதமுள்ள தொகையை நாம் தயார் செய்தாக வேண்டும். இந்த தொகையை கடனாக பெறுவதற்கு முயல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வீடு வாங்குவதற்கு பெறும் கடனுக்கு மாதம் தோறும் தவணைத் தொகை (இ.எம்.ஐ) செலுத்த வேண்டி இருக்கும் நிலையில் ‘மார்ஜின் மணி’க்கான தொகையையும் கடனாக பெற்றால் கூடுதல் நிதி சுமையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

    திருப்பி செலுத்தும் தகுதி

    இதை மனதில் கொண்டு தான் வீட்டுக்கடனை தேர்வு செய்ய வேண்டும். முக்கியமாக வீட்டுக்கடன் பெறுவதற்கு சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். மாதத் தவணை தொகை செலுத்தியது போக மீதமுள்ள பணம் மாத குடும்ப பட்ஜெட்டுக்கு ஈடு கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு திருப்பி செலுத்தும் மாத தவணை மாத வருமானத்தில் 40 முதல் 45 சதவிகிதத்துக்கும் மேலாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

    அப்படி இருக்கையில் மார்ஜின் மணியையும் கடனாக பெற்றால் அந்த பணத்தை திருப்பி செலுத்தும் தகுதி இருக்கிறதா? என்று யோசித்து பார்க்க வேண்டும். சிலர் மார்ஜின் மணிக்கான தொகையை தனிநபர் கடன் (பெர்சனல் லோன்) மூலம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இது வீட்டுக்கடன் தொகைக்கான வட்டியை விட அதிகம் என்பது ஒருபுறம் இருக்க, வீட்டுக்கடனுக்கான மாதத்தவணைத்தொகையுடன், பெர்சனல் லோனுக்கான மாதத்தவணையையும் சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும். இது பணப்பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

    சேமிப்பு அவசியம்

    இதை தவிர்க்க மார்ஜின் மணியை சேமித்து வைத்திருப்பது நல்லது. மேலும் வீட்டுக் கடன் வாங்குவதாக இருந்தால் மற்ற கடன்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அனைத்து தரப்பு கடன்களையும் ஒருசேர திருப்பி செலுத்தும் போது பணப் பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. வீட்டுக்கடனுக்கு அதிக தொகையை திருப்பி செலுத்துவதாக இருந்தால் கடன் தொகையைக் குறைத்து சதுர அடி குறைவான பரப்புள்ள வீட்டை வாங்கலாம். வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்டுவதாக இருந்தால் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சிறிய வீட்டை வடிவமைக்கலாம். பின்னர் பணம் கையில் இருக்கும்போது கட்டிய வீட்டை விரிவாக்கம் செய்யலாம்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.