', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    பழைய வீடு வாங்கப்போறீங்களா?


    பழைய வீடு வாங்கப்போறீங்களா?



    பதிவு செய்த நாள் : Apr 05 | 12:00 am



    சென்னை நகர்பகுதிகளில் குடியிருப்புகள் பெருக்கமடைந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் குடியேற்றம் பெருகி வருவதற்கு ஏற்ப வீடுகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் நிர்ணயிக்கப்படும் புதிய குடியிருப்புகளின் விலை அனைத்து தரப்பினரும் வாங்கமுடியாத அளவிற்கு ஏற்றத்துடன் இருக்கிறது. அதனால் குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு பழைய வீடுகள் வாங்குவது ஓரளவு சாத்தியமான விஷயமாக இருக்கிறது. அப்படி பழைய வீடுகள் வாங்க நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.

    * பெரும்பாலும் பழைய வீடு என்றாலும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்குவதற்கே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அவை கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டு களுக்கு உட்பட்டதாக இருப்பது நல்லது. அதை விட ஆண்டுகள் குறைவாக இருப்பதும் சிறந்தது.

    * அவை முறையான பராமரிப்புடன் இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். முக்கியமாக கட்டிடத்தின் தரம், தாங்குதிறனை பரிசோதிக்க வேண்டியது முக்கியம்.

    * பழைய வீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலையை தற்போதைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்கு வீடு வாங்கும் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் விலையை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விலை மதிப்பு எத்தனை சதவீதம் குறைவாக இருக்கிறது என்று கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

    * தாய் பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வீட்டு வரி, குடிநீர் வரி சரியாக செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். பத்திரங்களில் ஏதேனும் வில்லங்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் அந்த வீட்டை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

    * பழைய வீடு வாங்குவதற்கு சில வீட்டு வசதி நிறுவனங்களும், வங்கிகளும் கடன் வழங்குகின்றன. பழைய அடுக்குமாடி குடியிருப்பு வீடு எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதை கணக்கிட்டு கடன் கொடுக்கப்படுகிறது. எனினும் வீடுகள் பராமரிப்புடன் நல்ல தரத்துடன் இருந்தால் தான் கடன் கிடைக்கும்.

    * பழைய வீடுகளுக்கு கடன் கொடுப்பதில் பின்பற்றப்படும் நடைமுறைகளும் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. வீடுகள் எத்தனை வருடத்துக்கு பழையது என்பதை மதிப்பீடு செய்து வழங்கப்படும் கடன் தொகை வெவ்வேறு மதிப்புகளில் இருக்கிறது.

    * வங்கி கடன் மூலம் வாங்கும் புதிய வீட்டுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் கிடைக்கும் வருமான வரி சலுகை பழைய வீடு வாங்குவதற்கும் உண்டு. வாங்கும் வீட்டை வசிப்பதற்கு பயன்படுத்தினால் கடனுக்கு திரும்ப செலுத்தும் அசல் தொகையில் 80சி பிரிவின் கீழ் ஒரு லட்ச ரூபாயும், வட்டியில் 1.5 லட்ச ரூபாயும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் வீட்டை வாடகைக்கு விட்டால் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை கிடைக்காது. அதேநேரத்தில், வட்டி முழுமைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. அதுதவிர, வாடகையை வருமானமாக காண்பிக்க வேண்டும்.

    * பழைய வீடு வாங்கும்போது புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட பத்திரப்பதிவுக்கு கூடுதல் செலவு ஆகும். ஏனென்றால் பழைய அடுக்குமாடி குடியிருப்புக்கு பிரிக்கப்படாத மனைப் பரப்பு (யூ.டி.எஸ்) தவிர வீட்டின் மதிப்பையும் கணக்கிட்டு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். அதனால் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும். ஆகையால் பழைய வீடு வாங்கும்போது பத்திரப்பதிவு செலவையும், சந்தை மதிப்பையும் கணக்கிட்டு லாபம் தருவதாக அமையுமா? என்பதை மதிப்பீடு செய்து முடிவு எடுப்பது நல்லது.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.