', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    தனியார் பங்கு முத­லீட்டால் ரியல் எஸ்டேட் துறை புத்­துயிர் பெறுமா?

    சென்னை: கடு­மை­யான நிதி நெருக்­க­டியில் சிக்­கி­ உள்ள ரியல் எஸ்டேட் துறையில் முத­லீடு செய்ய, பல தனியார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்கள் முன்­வந்­துள்­ளன.இதனால், கடந்த சில ஆண்­டு­க­ளாக, மந்­த­க­தியில் உள்ள நாட்டின் ரியல் எஸ்டேட் துறை, புத்­துயிர் பெறு­வ­தற்­கான அறி­குறி தென்­ப­டு­கி­றது.அதிக வட்டிநாட்டின் பொரு­ளா­தார மந்­த­நிலை, விலை­வாசி உயர்வு, அதிக வட்டி உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­களால், தொழில்­துறை வளர்ச்சி தேக்கம் கண்­டுள்­ளது.குறிப்­பாக, ரியல் எஸ்டேட் துறை கடுமை­யான நெருக்­க­டியை சந்­தித்­து உள்ளது. பல நிறு­வ­னங்­களின் கட்­டு­மான திட்­டங்கள், போதிய நிதி வசதி இல்­லாமல் முடங்கிக் கிடக்­கின்­றன.மக்­க­ளிடம் வாங்கும் சக்தி குறைந்­துஉள்­ளதால், பல கட்­டு­மான நிறு­வ­னங்­களின் அடுக்கு மாடி குடி­யி­ருப்­புகள் விற்­ப­னை­யா­காமல் உள்­ளன. இது போன்ற கார­ணங்­களால், கட்­டு ­மான நிறு­வ­னங்­களின் கடன் சுமை கடு­மை­யாக உயர்ந்­துள்­ளது.கடந்த ஜூலை – செப்., வரை­யி­லான காலாண்டில், முன்­ன­ணியில் உள்ள எட்டு ரியல் எஸ்டேட் நிறு­வ­னங்­களின், ஒட்­டு ­மொத்த நிகர கடன், 36,977 கோடி ரூபாயாக அதிகரித்­துள்­ளது.இந்­நி­லையில், பல ரியல் எஸ்டேட் நிறு­வ­னங்கள், நிதிச் சுமையை குறைத்துக் கொள்ளும் பொருட்டு, தனியார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து செயல்­படத் துவங்­கி­யுள்­ளன.மேலும் பல நிறு­வ­னங்கள், குடியிருப்­பு­களின் விற்­ப­னையை அதி­கரிக்கும் நோக்கில், அவற்றின் விலையை கணி­ச­மாக குறைத்து வரு­கின்­றன.இத்­த­கைய சூழல் கார­ண­மாக, தனியார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்கள், ரியல் எஸ்டேட் துறையில், அதிக அளவில் முதலீடு செய்யத் தயா­ராகி வரு­கின்­றன.இந்த வகையில், தனியார் பங்கு முத­லீட்டு நிறு­வ­ன­மான, ஏ.எஸ்.கே குழுமும், சென்னை, டில்லி – என்.சி.ஆர்., மும்பை, புனே, பெங்­க­ளூரு ஆகிய நக­ரங்­களில், மேற்­கொள்ளும் குடி­யி­ருப்பு திட்­டங்­களில், 800 – 1,000 கோடி ரூபாய் வரை முத­லீடு செய்யத் திட்­ட­மிட்­டுள்­ளது. கட்டுமான திட்டங்கள்இந்­நி­று­வனம், கடந்த, 2011–12ம் நிதி­ஆண்டில், ஏற்­கெ­னவே, ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த, ஐந்து நிறு­வ­னங்­களின் கட்­டு­மானத் திட்­டங்­களில் முத­லீடு மேற்­கொண்­டுள்­ளது.இதே போன்று, தனியார் பங்கு முதலீட்டு குழு­ம­மான, ஏ.டி.எஸ்., சென்ற ஜூலையில், கூர்கான் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு திட்­டத்தில், 147 கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ளது.ஐத­ராபாத் தவிர்த்து, சென்னை, பெங்­க­ளூரு, மும்பை, டில்லி – என்.சி.ஆர்., புனே ஆகிய முக்­கிய ஐந்து நக­ரங்­களில், புதிய முத­லீ­டு­களை மேற்­கொள்ள, ஏ.டி.எஸ்., குழுமம் திட்­ட­மிட்­டுள்­ளது.இது போன்று, மேலும் பல தனியார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்கள், ரியல் எஸ்டேட் துறையில் முத­லீடு செய்து வருகின்­றன. இதனால், நடப்­பாண்டு, ஜன­வரி முதல் செப்­டம்பர் வரை­யி­லான, ஒன்­பது மாதங்­களில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் நிறு­வ­னங்­களின் பங்கு முத­லீடு, 188 கோடி டால­ராக (11,687 கோடி ரூபாய்) உயர்ந்­துள்­ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 123 கோடி டால­ராக (7,657 கோடி ரூபாய்) இருந்தது.வங்கிக்கடன்ரியல் எஸ்டேட் துறையின் சுணக்­கத்தால், வங்கிக் கடன் வச­தியை பெற முடி­யாமல் தவிக்கும் பல கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, கைகொ­டுக்க, தனியார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்கள் முன்­வந்துள்­ளன.இதன் மூலம், நாட்டின் ரியல் எஸ்டேட் துறை, புத்­துயிர் பெறுமா என்­பது, போகப் போகத்தான் தெரியும்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.