', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டுக்கடனை முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்


    வீட்டுக்கடனை முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்




    சொந்த வீட்டுக்கனவு பெரும்பாலானோருக்கு வீட்டுக்கடன் மூலமே சாத்தியமாகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து வீட்டுக்கடனை பெறுவதற்கு காட்டும் ஆர்வம் அதை திருப்பி செலுத்துவதிலும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப மாதத்தவணை தொகையை (இ.எம்.ஐ.) தடையின்றி செலுத்தி, வீட்டுக்கடனை முடிப்பதற்கு ஆர்வம் காட்டுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    முன்கூட்டியே முடிக்க ஆர்வம்

    மாதத்தவணை தொகைக்கு நிர்ணயிக்கப்படும் தொகை மாத குடும்ப பட்ஜெட்டுக்கு சிக்கல் எழாதவாறு இருந்தால் வீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சினை இருக்காது. சிலர் வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை தொகையை ஒருபுறம் செலுத்தி வந்தாலும், விரைவாக கடனை அடைக்கும் நோக்கத்தில் மாதம் ஒரு தொகையை கணிசமாக சேமித்து வருவார்கள்.

    குறிப்பிட்ட இடைவெளியில் கணிசமான தொகை சேர்ந்து விட்டால் அந்த தொகையையும் வீட்டுக்கடன் கணக்கில் சேர்க்க முற்படுவார்கள். அதன் மூலம் வீட்டுக்கடனை அடைப்பதற்கு ஆகும் காலத்தை குறைக்க நினைப்பார்கள். சிலர் சேமிப்பில் கணிசமான தொகையை சேர்ந்த பின்னர் வேறு வகையில் பணம் திரட்டி வீட்டுக்கடனை முன்கூட்டியே முடிப்பதற்கும் முனைப்பு காட்டுவார்கள்.

    ஆவண சரிபார்ப்பு

    அதற்கு வட்டி விகிதம் அதிகமாக இருப்பது முக்கிய காரணமாக இருக்கும். தற்போது வீட்டுக்கடனை விரைவாக முடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி விரைவாக வீட்டுக்கடனை முன்கூட்டியே முடித்துக் கொள்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு வங்கி, நிதிநிறுவனத்துக்கு என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டன என்பது பற்றிய விவரங்களை பட்டியலிட வேண்டும். அந்த ஆவணங்களை வங்கி, நிதிநிறுவனங்கள் திருப்பி தரும்போது அவை அனைத்தும் நம் கைக்கு கிடைத்து விட்டதா? என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

    உறுதிப்படுத்த வேண்டும்

    பொதுவாக வங்கி மூலம் வீட்டுக்கடன் பெறும்போது வங்கியில் கொடுக்கப்பட்ட ஆவண விவரங்கள் தொடர்பாக ரசீது கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த ரசீதில் வங்கிக்கடனுக்காக கொடுத்துள்ள ஆவணங்கள் எவை, எவை? என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். முக்கியமாக மனைப்பத்திரம், தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவண விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

    அந்த ஆவணங்கள் அனைத்தும் நம்மிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்பதை சரிபார்த்துக்கொள்வது மிக அவசியம்.

    கணக்கிட வேண்டும்

    முக்கியமாக வீட்டுக்கடன் கணக்கில் செலுத்த வேண்டிய தொகை எதுவும் இல்லை என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழை வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்வது பின்னாளில் பிரச்சினை எழுவதை தடுக்கும். மேலும் கடனை முன்கூட்டியே முடிக்கும்போது மாதத் தவணை தொகை மூலம் கட்டிய தொகை போக மீதம் செலுத்த வேண்டிய அசல் தொகை, வட்டி தொகை எவ்வளவு? என்பதை கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

    அந்த தொகை எவ்வளவு என்பதை வங்கியிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொள்வது நல்லது. அத்துடன் கடனை முடிப்பதற்கு மொத்தமாக திருப்பி செலுத்தும் தொகைக்கு வரையோலை, காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதும் சிறந்தது. வீட்டுக்கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினாலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடித்தாலும் கடன் வாங்குவதற்கு முன்பு வங்கியில் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.