', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வெப்பத்தை தணிக்கும் பசுமை சுவர்கள்

    வெப்பத்தை தணிக்கும் பசுமை சுவர்கள்

    கோடைக்காலத்தில் அக்னி கலந்த அனலின் உக்கிரம் ஆரம்பமாகும் முன்னரே சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. வெப்பத்தை தணிக்க ஏ.சி., ஏர்க்கூலர் போன்ற உபகரணங்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் கோடைக் காலத்தின் பிரதி    பலிப்பை உணராமல் இருப்பது என்பது சாத்திய      மானதல்ல. இம்மாதிரியான சூழ்நிலைகளில் வீட்டில் நிலவும் வெப்பத்தாக்கத்தை இயற்கையின் வரப்பிரசாதமான செடிகளை கொண்டு குளிர்விக்கும் முறைகளும் பரவலாகி வருகிறது.
    பசுமை சுவர்கள்
    தாவரங்களும் மனிதர்களை போன்றே சுவாசிக்க கூடியவை என்றாலும் மனிதனின் சுவாச காற்றை மாற்றி உள் இழுத்து, அதாவது கார்பன்–டை–  ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளி         யிடுகின்றன. இத்தாவரங்கள் வீட்டிற்குள் பசுமை நிறைந்த சூழலை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் கோடை காலங்களில் நிலவும் வெப்பத் தன்மையை குறைக்கவும் உதவும். இதுதவிர வீட்டுக்குள் அனல் சூழ்ந்த வெப்பம் உள்நுழைவதை தடுக்க பசுமை சுவர்களையும் அமைக்கலாம்.
    சுவர்களில் பசுமை தாவரங்களை பரவசெய்து வளர்ப்பதே பசுமை சுவர்களாக பிரதிபலிக்கின்றன. இத்தகைய பசுமை சுவர்களை அமைப்பது மிகவும் எளிமையான கட்டுமான முறையாகும். வீட்டின் கட்டுமான பணியின் போது சாதாரண சுவர்களுடன் சேர்த்து மணல் நிரப்பும்  வகையிலான கட்டுமானங்களை அமைத்து அதில் மணல் நிரப்பு செடிகளை நட்டு வளர்க்கலாம். மேலும் கட்டிமுடித்த வீட்டில் பந்தல் அல்லது கொடி மாதிரியான அமைப்பை உருவாக்கி வேர்கள் திறந்தவெளியில் வளரும் வகையிலான செடிகளை கொண்டு பசுமை சுவர்களை உருவாக்கலாம். சில செடிகளின் வேர்கள் நீரில் இருந்தாலே போதுமானதாகும். இம்       மாதிரியான செடிகளை தேர்வுசெய்து அவற்றை கயிறுகளில் தொங்கவிட்டு வளர்க்கலாம்.
     உள் அலங்கார செடிகள்
     வீட்டின் உட்புறங்களில் வளர்க்க ஏதுவாக உள்ள உட்புறத் தாவரங்களை கொண்டே இந்த பசுமை சுவர்களை அமைக்கலாம். இந்த சுவர்கள் பெரும்பாலும் வீட்டினை அலங்கரிப்பதில் பிரதானமாக விளங்குவதால் பசுமை தாவரங்களையே உள்அலங்கார பொருளாகவும் மாற்றிக் கொள்ளலாம். உள் அலங்காரத்தில் செடிகள் முக்கிய பங்கு வகிப்பவை என்பதால் செடிகளை கொண்டு அலங்கரிப்பது வீட்டில் ரம்மியமான சூழலை அதிகரிக்கும் விதமாகவும் அமையும்.
     பசுமை தாவரங்களை உள்ளடக்கிய சுவர்கள் அலங்கார பொருளாகவும், உடலுக்கு சிறந்த மருத்துவ காரணியாகவும் விளங்குகின்றன. அவை வெப்பத்தின் தாக்கத்தை உணரமுடியாத அளவுக்கு பசுமை கலந்த சூழலை உருவாக்கும் விதத்தில் அமைவது முதியோர்கள், நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகவும் மாறுகிறது. இத்தகைய பசுமை சுவர் தாவரங்களை உள் சுவர்கள் மற்றும் வெளி சுவர்களிலும் அமைத்துக் கொள்ளலாம்.
    குளிர்ச்சியை ஏற்படுத்தும்
    வெளி சுவர்களில் அமைக்கப்படும் பசுமை சுவர் தாவரங்கள் வெயில் காலங்  களில் சூரியனில் இருந்து வெளிப்படும்   கடுமையான வெப்ப கதிர்களை தனக்குள் உள்வாங்கி வீட்டில் வசிப்பவர்களுக்கு குளிர்ச்சியான சூழ்நிலையை அளிக்கிறது. மழைக்  காலங்களில் சுவர்களில் ஏற்படும் நீர்க் கசிவுகளை தடுப்பதுடன் சுவர்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை மறைக்கவும் பயன்படுகிறது. வீட்டின்  உட்புறத்தில் அமைக்கப்படும் பசுமை சுவர்கள் வீட்டில் நிலவும் வெப்பநிலையை அகற்றி சுத்தமான காற்றை அளிக்கிறது.
     நறுமண செடிகள், பூச்சி விரட்டிகள், மருத்துவ தாவரங்கள் போன்ற பலவகையான செடிகளை பசுமை சுவர்களில் பராமரித்து வளர்த்து வீட்டில் இயற்கை சூழலை தக்க வைக்கலாம். அத்துடன் பூச்சிகளை விரட்ட செய்யலாம். வண்ண வண்ண பூச்செடிகளை கலைநயத்துடன் வளர்ப்பது இயற்கையான தாவர ஓவியமாக காட்சியளிக்கும்.
    விதவிதமாக அமைக்கலாம்
    கொடி வகையிலான தாவரம், கொத்து வடிவிலான தாவரம், குச்சி வடிவிலான தாவரம் போன்ற பல வகைகளில் தாவரங்கள் நர்ச்சரியில் கிடைப்பதால் அவைகளை கொண்டு வீட்டுக்குள் தாவர ஓவியங்களையும் ஏற்படுத்தலாம். குறிப்பாக வட்டம், சதுரம் போன்ற வகைகளில் செடிகளுடன் கலந்த ஓவியங்களை அமைத்துக் கொள்ளலாம். வீட்டுத் தோட்டங்கள் அமைப்பது  ஒருபுறம் இருக்க, பசுமை சுவர்களுடன் அமைந்த வீடுகள் அமைப்பதும் மெல்ல பரவி வருகிறது. இவை கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிவதுடன் பசுமை நிறைந்த இயற்கையான சூழலையும் பிரதிபலித்து அழகுடன் காட்சி தருகின்றன. கோடையின் தாக்கத்தில் இருந்து விடுபடவும் பங்கெடுத்துக்கொள்கின்றன.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.