', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    ‘குளு குளு’ படுக்கை அறை


    ‘குளு குளு’ படுக்கை அறை



    பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am



    கோடைகாலம் வந்துவிட்டாலே அறைக் குள் அனலும் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். அதனால் வெப்பம் அதிக அளவில் உள் நுழைவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதால் அதற்கேற்ப அறையை அலங்கரிப்பது அவசியம். அது ஓரளவு மிதமான சூழலை தக்கவைக்க ஏதுவாக இருக்கும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்கும் படுக்கை அறையை அழகாகவும் மனதுக்கு இதமாகவும் அலங்கரிக்க சில டிப்ஸ்களை பார்ப்போம்.

    * கோடைகாலத்தில் அறைக் குள் வெப்பம் அதிகமாக உள் நுழையும் என்பதால் அதை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை முதலில் கையாள வேண்டும். ஜன்னல் வழியாக உட்புகும் காற்றும், ஒளியும் அறைக்குள் அனலை பிரதிபலிக்காதபடி திரைச்சீலைகளை தொங்கவிட வேண்டும்.

    * அடர்நிறங்களை கொண்ட திரைச்சீலைகளை உபயோகித்து வந்தால் அதற்கு பதில் காட்டன் திரைச்சீலைகளை தொங்கவிடுவது பலன் தருவதாக அமையும். அறைக்குள் அதிக அளவு வெப்பம் உமிழப்படுவது தவிர்க்கப் படும்.

    * அறைக்குள் குளிர்ச்சி நிலவ அலங்கார செடிகளையும் வளர்க்கலாம். அவை குளிர் சூழலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் செடிகள் வளர்ப்பதன் மூலம் அறைக்குள் சுத்தமான காற்று உலா வருவதற்கு வழிவகை ஏற்படும். தூசிகளை வெளியேற்றும் தன்மை கொண்ட செடிகளும் இருக்கின்றன. அவைகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் மாசற்ற காற்றை சுவாசிக்கலாம்.

    * படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் காட்டன் கலந்தவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவை உடலுக்கு இதமாக இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் படுக்கை அறைகளை அலங்கரித்த கம்பளி வகைகளை அப்புறப்படுத்திவிட வேண்டும். பட்டு வகை சார்ந்த துணிகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அவை சருமம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது.

    * தரை விரிப்புகள் அதிக அடர்த்தியானவையாக இருந்தால் அதையும் மாற்றிவிட வேண்டும். அவை வெப்பத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவையாக இல்லாததாக இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

    * படுக்கை அறையில் குளிச்சியான சூழலை ஏற்படுத்த கண்ணாடி குடுவையில் தண்ணீர் ஊற்றி வைத்து அதில் மலர்களை போட்டு வைக்கலாம். அவை கண்களுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். பூ ஜாடியில் அழகிய பூக்களை வைத்து அறையை அழகுபடுத்தலாம். அவை நறு மணம் கொண்டவையாக இருந்தால் அறைக்குள் வாசனையை பரப்புவதுடன் மனதுக்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.

    * படுக்கை அறையில் மீன் தொட்டியையும் வைக்கலாம். தொட்டிக்குள் வண்ண வண்ண மீன்களை வளர்த்து வந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கண்களும், மனதும் குளிர்ச்சி அடையும். தொட்டிக்குள் அழகிய செடிகளை வளர்த்து வருவதும் அறையின் குளிர்ச்சியில் பங்கெடுக்கும்.

    * கோடை காலங்களில் கறுப்பு நிறத்தை தவிர்ப்பது நல்லது. அவை வெப்பத்தை அதிகமாக வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவை என்பதால் அறைக்குள் கறுப்பு நிறம் சார்ந்தவை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பர்னிச்சர் களின் மேலுறைகள் கருமை நிறம் கொண்டவைகளாக இருந்தால் அவற்றை மாற்றிவிட வேண்டும். படுக்கை விரிப்புகளிலும் கறுப்பு நிறத்தின் ஆதிக்கம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெப்பத்தை கட்டுப்படுத்தும் வெளிர் நிற வண்ணங்களால் அறையை அலங்கரிக்கலாம்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.