', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்



    வீடு என்றவுடன் வீட்டினைச் சுத்தமாக வைத்திருத்தல், வீட்டைப் பராமரித்தல், தோட்டங்களைப் பராமரித்தல், பூச்சித் தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல் என்று சில பணிகள் முக்கியமானவையாக இருக்கின்றன. இது போல் மின் பயன்கருவிகள், குழாய்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் சில வீட்டு வசதிப் பொருட்கள் என்று வீட்டிற்குத் தேவையான பொருட்களின் பராமரிப்பும் முக்கியமானவையாக இருக்கின்றன. இவையனைத்தை யும் பராமரிக்கும் செய்திகளைக் கொண்டு http://www.acmehowto.com/ என்ற இணையதளம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    இந்த இணையதளத்தில் மேம்பாடுகள் (Improvements), பொருத்துதல் (Fix It), அழகூட்டல் (Decorate), படக் காட்சியகங்கள் (Photo Galleries), திறனாய்வுகள் (Reviews) போன்ற முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

    மேம்பாடுகள் (Improvements) எனும் முதன்மைத் தலைப்பில் சமையலறை மாற்றியமைத்தல் (Kitchen Remodel), வீட்டு அரங்கம் (Home Theatre) எனும் தலைப்புகள் இருக்கின்றன. சமையலறை மாற்றியமைத்தல் எனும் தலைப்பைச் சொடுக்கினால், சமையலறைப் பயன்பாட்டி லிருக்கும் பேழைகள் (Cabinets), துணைக்கருவிகள் (Appliances), மேல் பரிமாற்றங்கள் (Counter Tops), பின் தெறிப்புகள் (Backsplashes), தளமிடல் (Flooring), நீர்த்தொட்டிகள் மற்றும் திறப்புக் குழாய்கள் (Sinks and Faucets), ஒளியமைப்பு (Lighting), தொழில்நுட்பம் (Technolgy), காற்றோட்டம் (Ventilation) போன்ற உள் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த உள் தலைப்புகள் ஒவ்வொன்றிலும் அதற்கான விளக்கங்கள், தரம் மற்றும் வழிகாட்டித் தகவல்கள், பராமரிப்பிற்கான வழிமுறைகள், சிறப்புக் கூறுகள், உற்பத்தி நிறுவன முகவரிகள் என்பது போன்ற தலைப்புகள் அளிக்கப்பட்டு முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    வீட்டு அரங்கம் (Home Theatre) எனும் தலைப்பில் அதன் வகைகள், அதனைப் பயன் படுத்துவதற்கான வழிமுறைகள், தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.

    பொருத்துதல் (Fix It) எனும் முதன்மைத் தலைப்பில் துணைக்கருவிகள் சரி செய்தல் (Appliances Repair), தூய்மை செய்தல் (Cleaning), கணினிகள் (Computers), பைஞ்சுதைப்பூச்சு (Concrete), கதவு மற்றும் சாளரம் (Door and Window), காரையிலாச் சுவர் (Dry Wall), மின்சாரம் (Electrical), வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டல் (Heating and Cooling), வீட்டுப் பராமரிப்பு (Home Maintenance), புல்வெளி மற்றும் தோட்டம் (Lawn and Garden), ஓடு மற்றும் மென்சாந்து (Tile and Grout), குழாய் அமைப்பு (Plumbing), நோய்ப் பூச்சிக் கட்டுப்பாடு (Pest Control), வேய்தல் (Roofing), கருவிகள் (Tools) போன்ற தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.

    இன்னும் பல முக்கியமான அம்சங்களுடன் கூடிய இந்த இணையதளம் பயனுள்ளதாகவும், வீடு மற்றும் வீட்டு வசதிப் பொருட் கள் பராமரிப்புக்கு மிகவும் உதவக் கூடியதாகவும் இருக்கும்.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.