', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வளர்ச்சி அடைந்து வரும் மாதவரம்

    வளர்ச்சி அடைந்து வரும் மாதவரம்





    சென்னை புறநகர் பகுதிகளை நோக்கி குடியிருப்புகள் விரிவாக்கம் அடையத் தொடங்கியதில் இருந்து அந்த பகுதிகள் படிப்படியாக வளர்ச்சி பாதையை நோக்கி அடிஎடுத்து வைத்து வருகின்றன. அப்படிப்பட்ட பகுதிகளுள் ஒன்றாக விளங்குகிறது மாதவரம். புறநகர் பகுதியில் அமைந்து இருந்தாலும் வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளுள் ஒன்றாக இருக்கும் பெரம்பூரின் வடபகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கிறது.

    சாலை வசதி மேம்பாடு

    பெரம்பூர் பகுதியை ஒப்பிடும்போது சமூக கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தாலும் தற்போது படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்பு வசதிகள் மாதவரம் பகுதியை சூழ்ந்து இருக்கின்றன. மாதவரம்–செங்குன்றம் சாலை பகுதி சில முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் செல்வதால் அந்த பகுதிகளில் கட்டிடங்கள் பெருகிய வண்ணம் இருக்கின்றன.

    அது தவிர நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சாலை வசதிகளும் மேம்பட்டு வருகின்றன. அதனால் மாதவரம் வழியாக முக்கிய பகுதிகளை சென்றடையும் இணைப்பு சாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளை கட்டிடங்கள் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளன. வர்த்தக ரீதியான கட்டிடங்கள் சாலைப்பகுதிகளில் அமைந்திருக்க, உட்புற பகுதிகளில் குடியிருப்புகள் பெருகிய வண்ணம் இருக்கின்றன.

    சொத்து விலை குறைவு

    பெரம்பூர் பகுதியை ஒப்பிடும்போது இங்கு சொத்து மதிப்பு விலை குறைவாக இருக்கிறது. அதாவது பெரம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றின் விலை ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் அதே சதுர அடி அளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடு மாதவரம் பகுதியில் ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையில் கிடைக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பூர் பகுதிக்கு இணையாக மாதவரம் பகுதியில் சொத்து மதிப்பு உயர்வடையவில்லை என்றாலும் பெருகி வரும் சமூக கட்டமைப்பு வசதிகள் வருங்காலத்தில் விலை மதிப்பை உயர்த்தும் என்பது ரியல் எஸ்டேட் நிபுணர் களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் மாதவரம் பகுதியை நோக்கி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதன் மதிப்பை உயர்த்தும் வகையில் இருக்கிறது.

    வாங்குவதற்கு ஆர்வம்

    அதற்கு ஏற்ப ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்கள் இருக்கின்றன. மாதவரம் பகுதியில் ஆங்காங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் புதிய கட்டுமானங்களை அமைக்க ஆயத்தமாகி வருகின்றன. அவை பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை வீடுகளை கொண்டவைகளாக இருக்கும் விதத்தில் திட்ட மதிப்பீடு இருக்கிறது.

    வீடுகளின் சதுர அடி மதிப்பு ரூ.3,750 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது இடத்தை பொறுத்து மாறுபடுகிறது. முக்கிய பகுதிகளில் சதுர அடி மதிப்பு ரூ.4,500 வரையிலும் நீளுகிறது. மற்ற பகுதிகளை விட சொத்து மதிப்பு குறைவாக இருப்பதால் பெரம்பூர் பகுதிக்கு அருகில் வசிக்கும் பலரும் மாதவரம் பகுதியில் சொத்து வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

    முதலீடு நோக்கம்

    அதிலும் பலர் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதியாக மாதவரம் இருக்கும் என்பது ரியல் எஸ்டேட் ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் நீண்ட கால முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்க நினைப்பவர்களுக்கும் மாதவரம் பகுதி சாதகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். அதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் பகுதியாக மாதவரம் தென்படுகிறது. உடனே வீடு கட்டி குடியேற முடியாதவர்கள் பார்வை ஆங்காங்கே காலியாக கிடக்கும் வீட்டுமனைகள் பக்கம் திரும்பி இருக்கிறது.

    அனைத்து வசதிகளும் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் வீட்டுமனைகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவைகள் குறைந்த அளவிலேயே இருப்பதால் விலை மதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. ஆகையால் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகளுள் ஒன்றாக மாதவரம் விளங்குகிறது

    தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.