சுவர்களில் புகுந்து வரும் புதுமை
சுவர்களில் புகுந்து வரும் புதுமை
சுவர்களில் புகுந்து வரும் புதுமை
பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am
கட்டுமானத்தின் முக்கிய அங்கமாக விளங்குபவை சுவர்கள். திறந்தவெளிகளை வேலியாக, காம்பவுண்டாக மாற்றவும், வீட்டின் உட்பகுதியினை அறைகளாக பிரிக்கவும் சுவர்கள் பயன்படுகின்றன. மறைப்பு திரையாக பயன்படுத்தப்பட்ட சுவர்கள் தற்சமயம் அழகியலிலும் பங்கெடுத்துக்கொள்கின்றன.
சமையல் அறை மற்றும் சாப்பிடும் டைனிங் ஹால் பகுதிக்கு இடைப்பட்ட சுவர்கள் பெரும்பாலும் பாதி சுவர்களா கவே இருக்கும். இவை சமையல் அறையில் சமைப்பவர்களையும், டைனிங் ஹால் பகுதியில் இருப்பவர்களையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு நம் தேவைக்கு ஏற்ப சுவர்களை வடிவமைத்துக் கொள்ளலாம்.
டி–வடிவ சுவர்கள்
சுவர்கள் அழகிற்காக அமைத்தாலும், அறைத் தடுப்பிற்காக அமைத்தாலும் அவை கட்டுமான பணியில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்டுமான வேலைகளில் இரண்டாம் கட்ட பணிகள் என்று கருதப்படும் சுவர்கள் கட்டுமானத்தை எளிமையாக அமைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டி–வடிவ சுவர்கள் என்று அழைக்கப்படும் இப்புதுமையான தொழில்நுட்பம் சுவர்கட்டுமான முறைகளை எளிமைப்படுத்துகின்றன.
இத்தொழில்நுட்பத்தில் சுவர்கள் ரெடிமேட் முறைகளில் கிடைக்கின்றன. இந்த ரெடிமேட் சுவரின் அடிப்பகுதியில் சுவர்களை நிலையாக நிறுத்தும் வகையில் டி–வடிவில் தட்டையான பகுதி உள்ளது. இது டி–வடிவ சுவர்களின் அடித்தளமாக விளங்குகிறது. இந்த சுவர்களை கொண்டு வீடுகளை அமைக்க அடித்தள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அடிப்பரப்பு சமமாக இருக்கும் பட்சத்தில் டி–வடிவ சுவர்களை நிறுவி வீடுகளை அமைத்திடலாம்.
எளிமையாக அமைக்கலாம்
நிலையான அடித்தளம் அமைய பெறாமல் இருந்தாலும் சுவர்களை ஜே.சி.பி.கிரைன் போன்ற இயந்திரங்களை கொண்டு உயரத்தில் இருந்து வைப்பதன் மூலம் சமமான அடித்தளங்கள் அமைந்து விடுகின்றன. இந்த டி–வடிவ சுவர்களை கொண்டு எளிமையான நிரந்தர குடியிருப்புகளை அமைத்திட முடியும். இதனை தரை பகுதியோடு நிலையாக இருக்க செய்ய கான்கிரீட் கலவைகளை பயன்படுத்துகின்றனர். தரை மற்றும் சுவர்களை இணைக்க குறைந்த அளவிலான கான்கிரீட் கலவைகளே தேவைப்படுகின்றன.
டி–வடிவ சுவர்கள் முழு நீள சுவர்களாகவும், அழகுப்படுத்தும் வகையில் பாதி அளவுகள் கொண்ட சுவர்களாகவும் சந்தையில் கிடைக்கின்றன. சிறிய வீடுகளின் உள்பகுதியில் பயன்படுத்தப்படும் குறைந்த தடிமனிலான சுவர்களும் இத்தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. மேலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டவும் இந்த சுவர்களை பயன்படுத்தலாம்.
நேரம் குறையும்
அடுக்குமாடி குடியிருப்பு சுவர்கள் லீகோ விளையாட்டு கற்கள் முறையில் இருக்கும். இதில் ஒன்றை மற்றொன்றுடன் இணைக்கும் வகையில் மேல் கீழ் பகுதிகளில் பிரத்தியேகமான அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். இதனை கொண்டு ஒன்றின் மேல் மற்ற சுவர்களை வைத்து எளிமையாக சில மணி நேரங்களில் கட்டுமான பணிகளை முடித்து விடலாம்.
இதனால் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகும் நேரம் குறைகிறது. மேலும் டி–வடிவ சுவர்களை பயன்படுத்தி மேலை நாடுகளில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டிடங்களுக்கு மேல் சாதாரணமாக அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள் மற்றும் அழகுப்படுத்தும் கூம்பு வடிவ கோபுரங்கள் போன்ற அமைப்பு முறைகளை அமைத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை: