', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    சுவர்களுக்கு வலிமை சேர்க்கும் கற்கள்


    சுவர்களுக்கு வலிமை சேர்க்கும் கற்கள்





    சுவர்களுக்கு வலிமை சேர்க்கும் கற்கள்



    பதிவு செய்த நாள் : Apr 26 | 01:00 am



    கட்டுமானத்தின் முக்கிய அம்சமாக விளங்குபவை சுவர் கள். மழை, வெயில் என எத்தகைய பருவ காலத்துக்கும் ஈடுகொடுத்து கட்டிடங்களை வலிமையாக எழுந்து நிற்கச்செய்கின்றன.

    தொழில்நுட்ப முறைகளால் கட்டுமானத் துறை பல மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் புதிதாக அறிமுகமாகி உள்ளது ‘ஆட்டோகிளேவிட் கான்கிரீட் கற்கள்’. கான்கிரீட் கற்களை போன்றே இவையும் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டவை. காற்று நிரம்பிய கற்களாக காட்சியளிக்கும் இதனை எளிதாக உடைக்கவும், நெருக்கவும் முடியும்.

    எடை குறைவு

    இந்த தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்படும் கட்டிடங்களில் தண்ணீர், வேர், பூஞ்சை போன்றவை உட்புகுவது தடுக்கப்படுகிறது. மேலும் இவ்வகையான கற்கள் எடையில் மிகவும் லேசானதாக உள்ளன. இவற்றை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களில் எளிதாக துளையிட்டு வயரிங், தண்ணீர் இணைப்புகள் போன்றவற்றை இணைத்திட முடியும். மேலும் இதனை எளிமையான முறைகளிலே உடைத்தும் பின்னர் பிரத்தியேக கலவைகளை கொண்டு இணைத்தும் விடலாம்.

    இவை எடையில் லேசானதாக இருந்தாலும், கடினத்தன்மையில் சிறந்து விளங்கும் வகையிலே உள்ளன. கற்களின் கடினத்தன்மையை விளக்கும் ஆர்–வேல்யூவ், மற்ற கற்களை விடவும் இந்த தொழில்நுட்பத்தில் அதீத அளவில் உள்ளன. இதனால் கட்டிடத்தின் தாங்கு தன்மை அதிகமாகவே இருக்கும். இக்கான்கிரீட் கற்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இதனால் தேவைக்கேற்ப பல வடிவங்களிலான கற்களை பயன்படுத்தி வீடுகளை அமைத்துக் கொள்ளலாம்.

    சுவரின் தாங்குதன்மை

    இந்த தொழில்நுட்பத்தில் முக்கிய அம்சமாக காற்று குமிழ்கள் உள்ளன. கற்களின் நடுநடுவே சிறு அளவிலான காற்று குமிழ்கள் அமைந்திருப்பதால் இவை தண்ணீர் பாங்கான பகுதிகளிலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் கட்டப்படும் வீடுகளின் சுவர் களில் பெரும்பாலும் ஈரம் படர்ந்து இருக்கும்.

    சுவர்களில் ஈரம் படர்வதால் சுவரின் தாங்கு தன்மையும், உறுதி தன்மையும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இக் கற்களில் இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. மேலும் இயற்கை காரணிகளாக விளங்கும் மழை, கடும் வெப்பம் போன்ற தட்பவெட்ப பிரச்சினைகளை ஆட்டோகிளேவிட் தொழில்நுட்பம் தடுக்கிறது. இதனால் இவை வெயில் மற்றும் மழைக் காலங்களுக்கு ஏற்றவை.

    எளிதாக வீடுகள் அமைக்கலாம்

    ஆட்டோகிளேவிட் கான் கிரீட் கற்கள் பெரிய கற்களை அடுக்கி வைத்து வீடுகளை அமைத்துக் கொள்ளும் பேனல் வடிவிலும் கிடைக்கின்றன. இதனால் நான்கு, ஐந்து பேனல்களை கொண்டு எளிதாக வீடுகளை அமைத்திடலாம். இந்த வகையான கற்கள் நீரில் மிதக்க வல்லவை. மேலும் வெயில் காலம், குளிர்காலங்களில் சுவர்களின் மூலம் உள்நுழையும் வெயில் மற்றும் தண்ணீர் ஊடுறுவல் போன்ற பிரச்சினைகள் இந்த தொழில்நுட்பத்தில் தவிர்க்கப்படுகின்றன.

    இதுதவிர மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு போன்ற பணிகளுக்கு ஆட்டோகிளேவுட் கற்கள் மிகவும் எளிமையானவையாக அமையும். இவற்றில் கற்களுக்கு நடுவில் சிறுசிறு காற்று குமிழ்கள் இருப்பதால் கற்களை எளிதாக உடைக்கவும் முடியும். உடைந்த கற்களை சிமெண்டு கலவைகளைக் கொண்டு இணைத்திடலாம். இக்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகளில் பொதுவாக விரிசல்கள் ஏற்படுவதில்லை.

    செலவு குறைவு

    இந்த ஆட்டோகிளேவிட் கான்கிரீட் தொழில்நுட்பத்தை பின்பற்றி பல நாடுகளில் பலவகையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சில நாடுகளில் பாலங்களையும் இந்த தொழில்நுட்பத்தால் உருவான கற்களே தாங்கி நிற்கின்றன. இதில் சுண்ணாம்பு சத்து பொருட்கள் குறைந்த அளவிலே சேர்க்கப்பட்டிருப்பதால் மற்ற கற்களை போன்று நீர் கசிவு, நீர் பூத்துபோதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

    குறுகிய காலங்களில் முடிக்க வேண்டிய கட்டுமான வேலைகளுக்கு இவ்வகையான கற்கள் சிறந்த கட்டுமான பொருட்களாக இருக்க கூடியவை. இவற்றை எளிதாக அடுக்கி வைத்து சிறிதளவு சிமெண்டு கலவைகள் கொண்டு கட்டிடங்களைகட்டி முடித்து விடலாம். மற்ற கட்டுமான பொருட்களுக்கு ஆகும் செலவை விட இதற்கு ஆகும் செலவுகள் மிகவும் குறைந்தளவிலே இருக்கின்றன.
    தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.