', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    வீட்டு ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டியவை!

    வீட்டு ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டியவை!



    ஒரு சொத்தை வாங்க விருப்பப்படும்போது அந்த சொத்துக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் முழு தொகையையும் கொடுக்க கையில் பணம் இருக்காது. அப்படி பணம் இல்லாத பட்சத்தில் முன்பணம் மட்டும் செலுத்தி சொத்தின் உரிமையாளரிடம் கால அவகாசம் கேட்டு ஒப்பந்தம் போட்டுக்கொள்வது விற்பனை ஒப்பந்தம் எனப்படுகிறது. அல்லது சொத்தின் உரிமையாளர் சொத்தை வாங்குபவரிடம் உடனே சொத்தை ஒப்படைக்கமுடியாத சூழலில் அவகாசம் கோரினாலும் அதுவும் விற்பனை ஒப்பந்தமாக மாறும்.

    சொத்தை விற்கும்போது பதிவு செய்யப்படும் விற்பனை ஆவணத்துக்கு முன்பு தவிர்க்க முடியாத சூழலில் 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதப்படும் இந்த விற்பனை ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டிய சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

    * சொத்தை விற்பவர், அந்த சொத்தை வாங்குபவர் பற்றிய அனைத்து தகவல்களும் விற்பனை ஒப்பந்தத்தில் இடம் பெற்று இருக்க வேண்டும்.

    * சொத்தின் மீது வில்லங்கம் எதுவும் இல்லை என்ற தகவலையும் இடம்பெற செய்யலாம்.

    * எத்தனை நாட்கள் அல்லது மாதத்தில் விற்பனை ஆவணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.

    * சொத்தை விற்பதற்கு மதிப் பிடப்பட்டு இருக்கும் தொகை எவ்வளவு? அந்த தொகைக்கு சொத்தை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் ஒப்புதல் அளித்துள்ளாரா? என்ற தகவல் இடம்பெற வேண்டும். அதேபோல் அந்த தொகைக்கு சொத்தை பெற வாங்குபவர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற விவரமும் குறிப்பிடப்பட வேண்டும்.

    * வாங்குபவருக்கோ அல்லது அவர் குறிப்பிடும் மற்றொருவருக்கோ கூட சொத்தை விற்க அனுமதிக்கலாம் என்பது பற்றிய விவரத்தையும் ஒப்பந்தத்தில் தெரிவிக்க வேண்டும்.

    * சொத்தை வாங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ள முன்பணம் எவ்வளவு? மீதி தொகை எப்போது கொடுக்கப்படும் என்ற விவரமும் இடம்பெற்று இருக்க வேண்டும்.

    * விற்பனை ஆவணம் பதிவு செய்ய காலதாமதம் ஆகலாம் என்று கருதும் பட்சத்தில் சொத்தை விற்பவர், வாங்குபவர் இருவரும் சேர்ந்து, அவகாசம் கேட்டு காலநீட்டிப்பு செய்யலாமா? என்பது பற்றியும் விற்பனை ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும்.

    * ஒருவேளை சொத்தை விற்பவர் ஏதாவது ஒரு காரணத்தால் வாங்குபவர் பெயரில் விற்பனை ஆவணத்தை பதிவு செய்யவில்லை எனில் விற்பவர் இழப்பீடு தர வேண்டும் என்றும், அந்த இழப்பீட்டு தொகை எவ்வளவு என்ற விவரத்தையும் விற்பனை ஒப்பந்தத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    * அதுபோல் ஏதாவது ஒரு காரணத்தால் சொத்தை வாங்க முடிவு செய்தவர் அதை வாங்க முடியாத பட்சத்தில் விற்பவருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை பற்றிய விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

    * பெரும்பாலும் சொத்தை வாங்க விரும்புவர் கையிருப்பு பணம் தவிர மீதி பணத்தை திரட்டுவதற்காக போடப்படும் இந்த விற்பனை ஒப்பந்தத்தை பற்றிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு, அந்த விதிகளிலிருந்து மீறாமல் சொத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.